
தேவர் ஜெயந்தி இந்திய அளவில் டிவிட்டரில் டிரண்டிங்கில் முதலிடம் பிடித்து வருகிறது.
இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் ஜெயந்தி விழா கொண்டாடப் படுகிறது. தேசியமும் தெய்வீகமும் என் இரு கண்கள் என்று தமிழகத்தின் பாரம்பரியத்தை, தமிழ் மொழியின் தனிச் சிறப்பை, தமிழரின் கலாசாரத்தை உலகுக்கு தன் வாழ்நாளில் இறுதி நொடிகள் வரை பறைசாற்றி வாழ்ந்து காட்டிய வீரத் திருமகனாரின் ஜெயந்தி விழாவை தமிழர்கள் டிவிட்டரிலும் கொண்டாடி மகிழ்ந்து வருகிறார்கள்.
இன்று தேவர் ஜெயந்தி இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது.