spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉலகம்லாஸ் ஏஞ்சலஸில் வேகமாய் பரவும் காட்டுத் தீ!

லாஸ் ஏஞ்சலஸில் வேகமாய் பரவும் காட்டுத் தீ!

- Advertisement -
las enjal

லாஸ் ஏஞ்சலஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக அப்பகுதியில் வசிக்கும் ஹாலிவுட் நட்சத்திரங்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் உலகிலேயே பொழுதுபோக்கு அம்சங்களை அதிகமாகக் கொண்டிருப்பதால் ஹாலிவுட் படங்களின் படப்பிடிப்புகள் பெரும்பாலும் லாஸ் ஏஞ்சலஸ் நகரில்தான் நடைபெற்று வருகின்றன. இதனால் ஹாலிவுட் நட்சத்திரங்கள் பலர் இங்குதான் தங்கியுள்ளனர்.

இந்த நகரின் மேற்கில் அமைந்துள்ள வனப்பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென தீப்பிடித்தது. சிறிது நேரத்திலேயே அந்த தீ வனப்பகுதி முழுவதும் மளமளவென பரவியது. இதையடுத்து, கலிபோர்னியா மாகாண அரசின் உத்தரவின்பேரில் தீயணைப்புப் படையினரும், பேரிடர் மீட்புப் படையினரும் அங்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.

இதையடுத்து, ராணுவமும், விமானப் படையும் இணைந்து ஹெலிகாப்டர் மற்றும் விமானங்களின் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்று வருகின்றன. எனினும் காட்டுத் தீ மிகவும் வேகமாக பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வனப்பகுதியை ஒட்டியுள்ள சுமார் 618 ஏக்கர் நிலங்களும், நூற்றுக்கணக்கான வீடுகளும் காட்டுத் தீக்கு முற்றிலும் இரையாகி உள்ளன. மேலும், தீ பரவ வாய்ப்புள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்களில் அர்னால்டு ஸ்வாஸ்னேகர், கிளார்க் கெர்ஹ், கர்ட் ஸட்டர் உட்பட நூற்றுக்கணக்கான ஹாலிவுட் நட்சத்திரங்களும் அடங்குவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe