சென்னையிலிருந்து திருவனந்தபுரத்திற்கு பேருந்து சேவை!

இந்தியா சற்றுமுன்
keralabus

ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் 25-ம் தேதி முதல் கேரளாவில் இருந்து சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

ஓணம் பண்டிகை வரும் 31ம் தேதி கொண்டாடப்படுவதால் தமிழகத்தில் உள்ள மலையாளிகள் கேரளா சென்று வருவதற்கு வசதியாக கேரள அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது.

அதன்படி, வரும் 25-ம் தேதி முதல் செப்ட்ம்பர் 6-ம் தேதி வரை இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

திருவனந்தபுரத்தில் இருந்து தினமும் மாலை 6 மணிக்கு புறப்படும் பஸ் நாகர்கோவில் வழியாக சென்னைக்கு செல்கிறது. சென்னையில் இருந்து மறுநாள் மாலை 5 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரம் வருகிறது.

இதற்கான டிக்கெட் ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்யப்படும் எனவும் கொரோனா நிபந்தனைகளுக்கு உட்பட்டே பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.