gun

தமிழக – கேரள எல்லையில், சின்னாறு வனப் பகுதியில், துப்பாக்கியால் பெண்ணை சுட்டுக் கொன்ற, சந்தன மரக் கடத்தல் கும்பலை, போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே, கேரள மாநிலத்தில், சின்னாறு வனப் பகுதி உள்ளது. இங்குள்ள பலப்பட்டி மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிகளில், ஏராளமான சந்தன மரங்கள் உள்ளன.

கடந்த மாதம், 22ம் தேதி, ஒரு கும்பல், சந்தன மரங்களை வெட்டி கடத்த முயன்றது.தகவல் கொடுத்தது யார்?கேரள வனக் காவலர்களுக்கு தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்துக்கு சென்றனர். அதற்குள், கும்பல் தப்பிச் சென்றது. சில நாட்களுக்கு பின், அக்கும்பலைச் சேர்ந்த மணிகண்டன், 20, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜாமினில் வந்த அவர் மற்றும் கும்பலைச் சேர்ந்த, 15 – 16 வயது சிறுவர்கள் இருவர், நேற்று முன்தினம் இரவு, பலப்பட்டி குடியிருப்புக்குச் சென்று உள்ளனர்.அங்கிருந்த சந்திரிகா, 32, என்ற பெண் கழுத்தில் நாட்டுத் துப்பாக்கியை வைத்து, ‘சந்தன மரம் வெட்டியது குறித்து தகவல் கொடுத்தது யார்’ எனக் கேட்டு, மிரட்டிஉள்ளனர். பதில் சொல்லாததால், ஆத்திரமடைந்த அவர்கள், துப்பாக்கியால் சந்திரிகாவை சுட்டனர். இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

அச்சமயம் துப்பாக்கி சத்தம் கேட்டு, குடியிருப்பு மக்கள் ஓடி வந்து, மூன்று பேரையும் பிடித்து மரத்தில் கட்டி, அடித்து, உதைத்தனர். மறையூர் போலீசார் வந்து, மூன்று பேரையும் கைது செய்தனர்.

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

மணிகண்டனை, தேவிகுளம் நீதிமன்றத்திலும், மற்ற இருவரையும், தொடுபுழா சிறுவர் நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். சந்திரிகா உடல், கோட்டயம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.வனத் துறையினர் மற்றும் தகவல் கொடுக்கும் மக்களை, சந்தன கொள்ளையர்கள் மிரட்டுவதும், துப்பாக்கியால் சுடுவதும், குடியிருப்பு மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நக்சல் கண்காணிப்பில் சிக்கல்மலை மாவட்டமான, நீலகிரியில் பெரும்பாலான இடங்களில், மொபைல் போன் இணைப்புகள் இல்லாத நிலையில், வனத் துறையினர் மத்தியில், அதிகளவில், ‘வாக்கி டாக்கி’ பயன்படுத்தப்பட்டது. இதற்கான டவர், கிளன்மார்கன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. ஓராண்டாக, கூடலுார் வனப்பகுதியில், வாக்கி டாக்கி செயல்படாமல் உள்ளது. வனத் துறையினர் கூறியதாவது:தமிழகம், கர்நாடகா, கேரளா என, மூன்று மாநில எல்லையில் உள்ள பந்தலுார், கூடலுார் வனப்பகுதிகளில், மொபைல் போன் சிக்னல்கள் கிடைப்பதில்லை. வாக்கி டாக்கிகள் வழங்கப்பட்டதால், தகவல் பரிமாற்றத்தில் சிக்கல் ஏற்படாமல் இருந்தது. ஆனால், இவை தற்போது செயல்படுவதில்லை. இப்பகுதியில் நக்சல், வேட்டைக்காரர்கள் நடமாட்டத்துக்கு வாய்ப்பு உள்ளது. தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு தீர்வு காண வேண்டியது அவசியம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

ALSO READ:  தமிழின் மாண்பை இழிவுபடுத்திய நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending