செப்டம்பர் 1 முதல் பிருந்தாவன் திறக்க முடிவு! கர்நாடக அரசு!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
Brindavan

கர்நாடகத்தில் கடந்த மார்ச் மாதம் 2-வது வாரத்தில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதையடுத்து, கர்நாடகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும், வழிபாட்டு தலங்களும், வணிக வளாகங்களும், வனச்சரணாலயங்களும், உயிரியல் பூங்காக்களும் மூடப்பட்டன.

கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக பீதியில் மக்கள் கூட்டமும் குறைவாக உள்ளது.

இந்நிலையில், கர்நாடகத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான பிருந்தாவன் கார்டனும் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டது. 5 மாதங்களுக்கு மேலாக அந்த பூங்கா மூடப்பட்டு கிடக்கிறது. தற்போது, வருகிற 1-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் கே.ஆர்.எஸ். அணையின் அருகில் உள்ள பிருந்தாவன் கார்டனை திறக்க முடிவு செய்துள்ளது.

அன்று முதல் சுற்றுலா பயணிகள் பிருந்தாவன் கார்டனை சுற்றி பார்க்கலாம். ஆனால் கே.ஆர்.எஸ். அணை நிரம்பி இருப்பதால், முன்னெச்சரிக்கையாக அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.