நீர்வீழ்ச்சி சாலையில் துப்பாக்கியுடன் தீவிரவாதிகள் நடமாட்டம்: போலீஸ் ரோந்து பணி தீவிரம்!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
terrorist

கர்பி அங்லாங் மாவட்டத்தில் டோகோ லங்சோவில் உள்ள பிட்சர்குயூ நீர் வீழ்ச்சிக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவு சென்று வருவது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில், நீர் வீழ்ச்சிக்கு செல்லும் சாலையில் சுற்றுலாப் பயணிகளுக்கு மத்தியில் அதிநவீன துப்பாக்கிகளை ஏந்தியபடி ஐந்து பேர் ரோந்து சென்றுள்ளனர்.

இதையடுத்து, நீர் வீழ்ச்சிக்கு செல்லும் சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஐக்கிய மக்கள் புரட்சி முன்னணி அமைப்பை சேர்ந்த இந்த தீவிரவாதிகள் கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக பொதுவெளியில் நடமாடுவது போன்ற வீடியோ காட்சியை வெளியிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.