இன்று முதல் தொடங்கிய ரோரோ ரயில் சேவை!

Published:

roro train - 2026

ரோரோ ரெயில் சேவை கர்நாடக மாநிலம் பெங்களுருவில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் வரை இயக்கப்படுகிறது. சுமார் 682 கி.மீ பயணிக்கும் இந்த ரெயில் 17 மணி நேரத்தில் இலக்கை சென்றடையும். ஒரே நேரத்தில் ஒரு ரெயிலில் 42 லாரிகளை ஏற்றிச்செல்ல முடியும்.

கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோரோ ரெயில் சேவை ஆகஸ்டு 30 முதல் தொடங்கப்படும் என்று தென் மேற்கு ரயில்வே தெரிவித்திருந்தது.

இந்த ரெயில் போக்குவரத்தை இன்று காலை 9.15 மணியளவில் கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Related articles

Recent articles

spot_img