பச்ச பிள்ளைய.. பந்து போல தூக்கி தூக்கி போட்டு கொன்ற தந்தை! வைரல் வீடியோ!

Published:

The child killed by the father - 2026

தனது குழந்தையை ஆத்திரத்தில் தந்தை ஒருவர் சோபாவில் தூக்கி போட்டு கொடூரமாக கொலை செய்த வீடியோ ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவில் உள்ள ஷாங்க்சி என்ற மாகாணத்தில் உள்ள பாரோஜி நகரை சேர்ந்த தம்பதி ஒருவர்களுக்கு பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று இருந்து உள்ளது. இந்நிலையில் சம்பவம் நடந்த நாளன்று குழந்தை அதிகமாக குறும்பு செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் அந்த குழந்தையின் தந்தை, பச்சிளம் குழந்தை என்று கூட பார்க்காமல் பலமுறை அந்த குழந்தையை சோபாவின் மேல் தூக்கி போட்டு பந்தை போல மேலே கீழுமாக போட்டு உள்ளார்.

இதனை அடுத்து அந்த குழந்தையை மீட்டு அங்கு உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

இதனை அடுத்து போலீசார் குழந்தையின் தந்தையை கைது செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

Related articles

Recent articles

spot_img