
பங்களாதேஷிலிருந்து இந்தியாவுக்கு கடத்தப்பட்டு விபசாரத்தில் தள்ளி சீரழிக்கப்பட்ட ஒரு 14 வயது சிறுமியை போலீசார் மீட்டனர் .
குஜராத்தின் சூரத்தில் உள்ள ஒரு ஸ்பா மையத்தில் சனிக்கிழமை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர்.,
பஞ்சாபைச் சேர்ந்த 19 வயது சிறுமியும், பங்களாதேஷைச் சேர்ந்த 14 வயது சிறுமியும் மீட்கப்பட்டனர். அப்போது அந்த ஸ்பா மையத்தின் உரிமையாளர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த பங்களாதேஷ் சிறுமி பங்களாதேஷின் குல்னா மாவட்டத்தில் இருந்து கடத்தப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் விற்க்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர் .
பங்களாதேஷிலிருந்து ஒரு 14 வயது சிறுமி கடத்தப்பட்டு ,பிறகு அவரை 50000 ரூபாய்க்கு அங்குள்ள ஒரு தரகர் மூலம் வாங்கப்பட்ட சிறுமி இந்தியாவில் பெங்களுர் மற்றும் சூரத் என பல தரகரகர்களிடம் விறக்கபட்டு உள்ளார்.
இப்போது சூரத்தில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் நடத்தப்பட்ட விபச்சார சோதனையில் போலிஸாரின் பிடியில் சிக்கினார். அவரை மீட்ட போலீசார் அவரை அங்குள்ள பெண்கள் பாதுகாப்பு மையத்துக்கு அனுப்பினார்கள் .
பிறகு அந்த அழகு நிலையத்தின் உரிமையாளர்கள் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அப்போது போலீசார் கூறுகையில் இதே போல் பல சிறுமிகள் பங்களாதேஷிலிருந்து இந்தியாவுக்கு கடத்த படுவதாகவும் ,அங்கு அவர்களின் பெற்றோர் போலீசில் புகாரை கொடுத்துவிட்டு என்றாவது ஒருநாள் தங்களின் மகள் தங்களை காண வருவாரென்று காத்துக்
கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அந்த சிறுமிகள் இங்கு விபசாரத்தில் தள்ளப்பட்டு சீரழிக்க படுவதாகவும் கூறினார்கள் .
இப்போது இந்த விஷயத்தில் கடுமையாக நடவடிக்கையெடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்,