கத்தி கடப்பாறையுடன் இரு பிரிவினர் மோத… அச்சத்தில் பொதுமக்கள்!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
kadappa-issue
kadappa-issue
  • கடப்பாவில் இரண்டு பிரிவினர் இடையே சண்டை.
  • கத்தி கடப்பாரையோடு தாக்குதல்.
  • பொதுமக்கள் அச்சம்.

கடப்பா மாவட்டம் கமலாபுரத்தில் ஆட்சியிலிருக்கும் ஒய்சிபி மற்றும் எதிர்க்கட்சி தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டார்கள்.

ஆந்திரா முதலமைச்சர் ஒய்எஸ் ஜகன்மோகன் ரெட்டியின் தாய்மாமன் ரவீந்தரநாத் ரெட்டியின் தொகுதி கடப்பா மாவட்டம் கமலாபுரமத்தில் இரு பிரிவினரிடையே சண்டை மூண்டது.

ஆட்சியில் இருக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மற்றும் எதிர்க்கட்சி தெலுங்குதேசம் கட்சித் தலைவர்கள் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் கத்தியாலும் கடப்பாரையாலும் தாக்கிக் கொண்டார்கள். உள்ளூர் மக்கள் அச்சமடைந்தார்கள்.

போலீசார் களத்தில் இறங்கி மிகவும் பிரயத்தனம் செய்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள். ஆனால் தற்போதும் அங்கு நிலைமை மிகவும் பதற்றமாக உள்ளது என்று போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

கமலாபுரம் கிட்டங்கி வீதி சீதாலம்மா கோவில் அருகில் சனிக்கிழமை காலை ஒரு விவாதத்துக்குரிய நிலம் விஷயத்தில் ஆட்சியில் இருக்கும் ஒய்சிபி மற்றும் எதிர்க்கட்சி தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள் பரஸ்பரம் சண்டையில் ஈடுபட்டார்கள்.

அது இரு பிரிவினருக்கும் இடையே பெரிய யுத்தமாகவே மாறிவிட்டது. கத்திகளும் கட்ப்பாறைகளும் எடுத்து வந்து இரு பிரிவினரும் ஒருவருக்கொருவர் தாக்குதலில் ஈடுபட்டார்கள். இந்தத் தாக்குதலால் இரு பிரிவுக்கும் தொடர்புடைய சிலருக்கு காயங்கள்ஏற்பட்டன.

இந்த தாக்குதலால் உள்ளூர் மக்கள் அச்சமடைந்து உள்ளார்கள். சிறிது நேரம் இரண்டு பிரிவினரும் மிகவும் பயங்கரமாக ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டார்கள். பயத்துக்காளான உள்ளூர் மக்கள் போலீசாருக்கு செய்தி தெரிவித்ததால் அவர்கள் களத்தில் குதித்தார்கள். போலீசார் வந்தபின் கூட இரண்டு பிரிவினரும் தாக்கிக் கொண்டே இருந்தார்கள்.

போலீசார் மிகவும் சிரமப்பட்டு இரண்டு பிரிவினரையும் விரட்டி அடித்ததபின் சூழல் கொஞ்சம் அமைதியானது. ஆனால் அந்தப் பகுதியில் பதற்றமாகவே இருப்பதால் போலீஸ் படையினர் அங்கு குவிந்து உள்ளார்கள். நிலைமையை பரிசீலித்து வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.