Homeஉரத்த சிந்தனைஐநா.,வில் சீனா இனி ... ?

ஐநா.,வில் சீனா இனி … ?

un-council
un-council

வீட்டோ அதிகாரத்தில் உள்ள சீனாவை எப்படி வீட்டுக்கு அனுப்பலாம் என்று உலகின் மற்ற நாடுகள் யோசித்து கொண்டு இருக்க ஓசைப்படாமல் சீனாவை ஓரங்கட்ட சட்ட ரீதியாக காய் நகர்த்த யோசனை கொடுத்ததை பார்த்து வாய் பிளந்து இருக்கிறார்கள் உலக அறிவு ஜீவிகள்.

இப்படி எல்லாம் யோசிக்க எங்கே கற்றார்கள் என்று மண்டையை பிராண்டி கொண்டு இருக்கிறார்கள்.

என்ன இருந்தாலும் சாணக்கியர் தேசம் அல்லவா என அர்த்த புஷ்டியுடன் பார்க்க ஆரம்பித்து விட்டனர்.ஷ

அப்படி என்ன செய்தது இந்தியா???அதற்கு முன்னர், United Nations என்கிற #ஐக்கிய_நாடுகள்_சபை உலகின் அங்கீகரித்த நாடுகள் அனைத்தும் உறுப்பினராக உள்ள அமைப்பு இது. இதன் அதிகார வரம்புக்குள் அனைத்து நாடுகளும் வருகிறது.

mao
mao

அமெரிக்காவே தன் நாட்டுக்கு வர தடை செய்த நாட்டினை சேர்ந்தவர் கூட ஐநா பொறுப்பில் இருந்தால் அந்த நாட்டிற்கு செல்ல தடையேதும் இல்லை.இதற்கு என தனி ராணுவம் உண்டு.அவர்கள் அனைத்து நாடுகளும் பங்கேற்ற பொது ராணுவத்தினர்.ஒவ்வொரு ஆண்டும் இதன் செலவிற்கு உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து பணம் கொடுக்க வேண்டும்.

இதில் இந்தாண்டு ஆரம்பத்தில் இந்தியா முழு தொகையையும் செலுத்திய மிக சில நாடுகளில் ஒன்றாக திகழ்ந்தது.ஆனால் ஆனானப்பட்ட அமெரிக்கா முதல் சீனை இன்று வரை முழுவதும் செலுத்தாமல் பாக்கி வைத்து இருக்கிறார்கள். இத்தனைக்கும் இந்தியா நிரந்தர உறுப்பு நாடு கூட அல்ல.

இதில் சீனா உறுப்பினராக மட்டும் இல்லாமல், #வீட்டோ அதிகாரத்தில் உள்ள ஐந்து முக்கிய நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. இந்த வீட்டோ அதிகாரம் என்பது உலக நாடுகள் பலவும் சேர்ந்த கொண்டு வந்த தீர்மானங்களை கூட மறுக்க முடியும், தட்டி கழிக்க முடியும்.தற்போது உலகில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைக்கு சீனா தான் காரணம் என்றும், இதற்கு அது பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றும் உலக நாடுகள் பலவும் கருவிக் கொண்டு இருக்க, ஐநாவும் ஏதேனும் செய்ய முடியுமா, அல்லது சீனாவை நிரந்தர உறுப்பினர் பதவியில் இருந்து தூக்க முடியுமா, அதற்கு சாத்தியம் உள்ளதா என்றெல்லாம் ஆராய்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

அது சட்டப்படி அவ்வளவு சுலபமான காரியமல்ல. ஐநாவில் உறுப்பு நாடு ஒன்றை நீக்குவது போல சீனாவை நீக்க முடியாது. உலக நாடுகள் பலவும் ஒன்று திரண்டு தீர்மானம் கொண்டு வந்தாலுமே கூட வீட்டோ அதிகாரத்தில் உள்ள நாடுகள் ஏதேனும் ஒன்று தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அந்த தீர்மானத்தை நிராகரிக்கவும் முடியும்.

சீனாவிற்கு அந்த அதிகாரம் உள்ளது. போதாக்குறைக்கு உலக நாடுகள் பலவற்றிற்கு கடன் வழங்கியுள்ளது சீனா, அதனால் அவர்கள் சபையில் வைத்து இந்த தீர்மானத்தை கொண்டு வருவது அசாத்தியமானது. அதற்கு வாய்ப்பே இல்லை. அவ்வளவு ஏன் அமெரிக்காவுக்கே சீனா கடன் கொடுத்து உள்ளது.நிலைமை இவ்வாறு இருக்க சீனாவை ஏதேனும் செய்ய வேண்டும், தங்கள் நாட்டின் பொருளாதாரத்தை சீர்க்குலைத்த அவர்களை சும்மா விட கூடாது என்று பல நாடுகள் அலைபாய்ந்து கொண்டு இருக்கிறார்கள்.இந்த இடத்தில் தான் இந்தியா வருகிறது.

ஒன்றை மாத்திரம் சொன்னார்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு. மூச்சடைத்து விட்டனர் கேட்டவர்கள். நீங்களும் சொல்லுங்கள் சாத்தியமா என்று….

nehru
nehru

விஷயம் இது தான்.

இரண்டாம் உலகப் போர்களுக்கு பிறகு 1945 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஐநா சபையில், போரில் பங்கேற்ற இப்போது உள்ள படியே ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளும் மற்றும் மற்றைய நாடுகள் உறுப்பினர்களாக கொண்டு ஆரம்பித்து விட்டனர்.ஜப்பான், இட்டாலி போன்ற பலத்த அடிவாங்கிய நாடுகள் உறுப்பினர்களாக மட்டுமே சேர்த்துக் கொள்ள பட்டனர்.

ஆனால் 1950 ஆம் ஆண்டில் பீப்பிள் லிபரேஷன் ஆர்மி எனும் பெயரில் மக்களை ஒன்று திரட்டிய #மாவோ சீனாவை கைப்பற்றி ஏற்கனவே அங்கு இருந்த குடியரசு கட்சியை சேர்ந்த பலரையும் வெளியேறியது.

shanke-sheik
shanke-sheik

#ஷாங்_கே_ஷேக் தலைமையிலான இவர்கள் தென் சீனக் கடலில் உள்ள தீவில் தங்கள் ஆட்சியை தொடர்ந்தனர். அது தான் இன்றைய #தைவான். வீட்டோ அதிகாரம் கொண்ட ஐநாவின். உறுப்பினர் பதவி இவர்கள் வசம் தான் இருந்தது.இன்றைய சீனாவை சைனீஸ் மெயின் லேண்ட் என்று அழைத்து வந்தனர்.1971,அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி அமெரிக்கா ஒரு தீர்மானம் கொண்டு வந்து இவர்களை அதாவது மாவோ தலைமையிலான சீனாவை, முழுமையான சீனா என்று அங்கீகரித்தனர்.

அதனால் சீனா இந்த நிரந்தர உறுப்பினர் பதவியை பெற்றது.ஆக இப்போது உள்ள கம்யூனிஸ்ட் சீனாவிற்கு அந்த பதவியை கொடுக்கவில்லை. அதனால் சீனா அந்த பதவியை அதனை சொந்தம் கொண்டாட முடியாது.இரண்டாவதாக சீனா, ஐநா தடை செய்து உத்தரவிட்ட நிலையில் வட கொரியாவுடன் வர்த்தக உறவினை தொடர்ந்து வருகிறது.

வட கொரியாவின் நிலக்கரி மற்றும் தாது பொருட்களை #யளு ஆற்றின் வழியாக சீனாவின் வடமேற்கு நகரமான #டானடங் கொண்டு வந்து அங்கு இருந்து ஹாங் காங் கொண்டு சென்று பின்னர் உலகம் முழுவதும் வர்த்தகம் மேற்கொள்ளுகிறது.

ஆக ஐநா சபையின் தடையை மீறி இருக்கிறது, இது ஐநா சபை சட்ட படி குற்றம்.மூன்றாவதாக ஐநா சபை சாசனத்தில் உள்ள இரண்டாம் அத்தியாயத்தில் ஆறாவது பிரிவின் கீழ் ஒரு நாட்டின் இறையாண்மையில் தலையீட கூடாது, மீறீனால் உறுப்பினர் அந்தஸ்து நீக்கப்படும் சட்டம் சொல்கிறது. இதனையும் சீனா செய்து வந்திருக்கின்றனர்., திபெத்திய பிராந்தியத்தில்.ஆக இந்த மூன்று விஷயங்களுக்கு சீனா பதில் சொல்லியே ஆக வேண்டும். தீர்மானம் கொண்டு வர வேண்டியது இல்லை. கேள்வி கேட்டால் போதும். கேள்வி கேட்க அதிகாரம் வேண்டியது இல்லை. ஆனால் பதில் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது என்று அழகாக எடுத்து கொடுத்துள்ளனர், நம்மவர்கள்.

இவற்றை எல்லாம் மறுக்க முடியாது அது சமயம் ஒப்புக்கொள்ளவும் முடியாது சீனாவால். ஒப்புக்கொண்டால் பதவி பறிபோகும். மறுத்தால் சீனா மீது பொருளாதார தடை வரும். இல்லையென்றால் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டி வரும்.

இருக்கின்ற விழியையும் பிதுங்கி நிற்க வைத்து இருக்கிறார்கள், சீனர்களை.இப்போது இதன் சாத்தியக்கூறுகளை நீங்களே சொல்லுங்கள்

saaingven
saaingven

இதனை கேள்வி பட்ட மாத்திரத்தில் ஆனந்த கண்ணீரில் வடித்து கொண்டு இருக்கிறார்கள் தைவானில். ஓரே ஒரு வாழ்த்து செய்தி மட்டுமே அனுப்பினோம் இப்படி நம் வாழ்க்கையையே மாற்றி விட்டாரே என்று கொண்டாடாத குறை அவர்களுக்கு, விசாரித்து பார்த்ததில் கடந்த 17 ஆம் தேதி இந்திய பிரதமரின் 70 வது பிறந்த நாள் வாழ்த்து செய்தி ஒன்றை தைவான் அதிபரின் பெயரில் வந்திருக்கிறது, அதனை அப்படியே அங்கீகரித்து விட்டது பிரதமர் அலுவலகம்.

அதாவது தைவான் அதிபரின் வாழ்த்தாகவே அங்கீகரித்து இருக்கிறார்கள். இதன் மூலம் தைவானை தனி நாடாக அங்கீகரித்த முதல் நாடாக இந்தியா மாறியிருக்கிறது.

இது நாள் வரை சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாக இருந்த தைவான் இன்று தனி நாடாக பார்க்கப்படுகிறது என்பது இதன் உட்பொருள். இதற்கு அடுத்ததாக தான் மேற்சொன்ன விஷயங்களும் நடந்துள்ளது.

கட்டுரை: ஸ்ரீராம் செல்லமணி

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,100FansLike
380FollowersFollow
76FollowersFollow
74FollowersFollow
3,951FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

பொன்னியின் செல்வன்-3 நாட்களில் ரூ.200 கோடி வசூல் ..

மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன் பாகம் 1' திரைப்படம் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் ரூ.200...

வலிமை, பீஸ்ட் படங்களுக்குப் பிறகு வசூலில் கலக்கும் பொன்னியின் செல்வன் ..

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் செப்30இல்  வெளியான இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்...

படம் பாக்க போலாமா? இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸாசாகும் மாஸ் படங்களை!

புத்தம் புது படம் பாக்க போலாமா? இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸாசாகும் மாஸ் படங்களை!...

பாலிவுட் நடிகைகளை மிஞ்சும் பிரபல பாடகி ஜோனிடா காந்தி..

பிரபல பின்னனி பாடகி ஜோனிடா காந்தி , பஞ்சாபி தெலுங்கு மராத்தி குஜராத்தி கன்னட...

Latest News : Read Now...