செல்போன் மூலம் பெண்களிடம் ஆபாசமாக பேசி மிரட்டிய இளைஞர் கைது!

கிரைம் நியூஸ் சற்றுமுன் திருச்சி
pudukkottai-karthikeyan
pudukkottai-karthikeyan

செல்போன் மூலம் பெண்களிடம் ஆபாசமாக பேசி மிரட்டிய நெற்குப்பை இளைஞர் புதுகையில் கைது!

புதுக்கோட்டையில் பல பெண்களுக்கு செல்போன் மூலம் ஆபாசமாக பேசியும், பெண்களின் உடல் அங்கங்களை ஆபாசமாக வர்ணித்தும், பெண்களின் மானத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் மிரட்டிய நபரை கணேஷ்நகர்காவல் நிலைய தனிப்படையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பையைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கார்த்திகேயன்(39) என்பவரை கணேஷ் நகர் காவல் நிலைய ஆய்வாளர் அழகம்மாள் தலைமையில் எஸ்.ஐ.குணசேகரன், காவலர்கள் செந்தில்குமார் தங்கப்பாண்டியன், பிரகாஷ், சைபர் கிரைம் காவலர் பிரபு உள்ளிட்ட தனிப்படையினர் கைது செய்தனர்.

வழக்கில் கிடைத்த செல்போன் நம்பரை மட்டும் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி குற்றவாளியான கார்த்திகேயனை கைது செய்து அவரிடமிருந்து செல்போன் மற்றும் சிம் கார்டுகளைக் கைப்பற்றினர்.

பின்னர் அவர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி அறந்தாங்கி கிளைச் சிறையில் அடைத்தனர்.

  • செய்தி: தனபால், புதுக்கோட்டை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.