மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, குற்றாலம் மெயினருவியில் இன்று காலை முதல் நீர் வரத்து அதிகரிப்பு. ஆனால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி இல்லை.!
தென்காசி மாவட்டம் திருக்குற்றால மலையை ஒட்டிய பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதையடுத்து திருக்குற்றால அருவிக்கு நீர் வரத்து தற்போது அதிகரித்துள்ளது.
குற்றாலத்தில் தற்போது மழை பெய்து வருவதை அடுத்து மெயினருவியில் இன்று காலை முதல் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது ஏற்கனவே உருவான காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை என்பதால் அருவிக்கரைப் பக்கம் எவரையும் குளிப்பதற்கு போலீசார் அனுமதிக்கவில்லை