30 ஆண்டு சிரமம்! மலையைத் தோண்டி கால்வாய் அமைத்தவருக்கு ஆனந்த் மகேந்திரா பரிசு!

Published:

anand-mahindra
anand-mahindra

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த லௌங்கீ பூயியா வுக்கு மகேந்திரா குரூப் சேர்மன் ஆனந்த் மகேந்திரா பரிசாக டிராக்டர் அளித்துள்ளார்.

பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் பாங்கேபஜார் ப்ளாக் என்ற இடம் உள்ளது. இந்த இடத்தில் வசிக்கும் மக்கள் விவசாயத்தை ஆதாரமாகக் கொண்டுள்ளார்கள்.

நீர் வசதி இல்லாமல் இருப்பதால் நெல், கோதுமை போன்ற பயிர்களை பயிரிடும் நிலையில் அவர்கள் இல்லை. அதனால் அந்த இடத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக கிராமத்தை விட்டு நகரங்களுக்கு வெளியேறினார்கள்.

அதேபோல் கோட்டில்வா கிராமத்தில் வசிக்கும் லௌங்கீ பூயியா வின் மகன்களும் வயிற்றுப் பிழைப்புக்காக வெளியேறினார்.

man-making-canel

ஆடுகள் மேய்க்கும் லௌங்கீ பூயியாவுக்கு ஒரு எண்ணம் வந்தது. கிராமத்திற்கு நீர் வசதி ஏற்படுத்தினால் தன் மகன்கள் யாரும் வயிற்றுப்பிழைப்புக்காக கிராமத்தை விட்டு வெளியேறாமல் இருப்பார்கள் என்று எண்ணினார்.

எண்ணியபடியே முதலில் கிராமத்திற்கு நீர் வசதி எவ்வாறு கொண்டுவருவது? நீர் வர வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்தால் கிராமத்திற்கு நீர் வரும்? என்றெல்லாம் அவர் யோசிக்க ஆரம்பித்தார். கிராமத்தின் அருகில் ஒரு மலை உள்ளது. பெய்யும் மழைநீர் அந்த மலைமேல் நின்று விடுகிறது. கீழே இறங்கி வருவதில்லை. அதனால் அந்த மலை மேல் இருக்கும் நீர் கீழே வரும்படி செய்தால் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று எண்ணினார்.

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!

எண்ணியபடியே கால்வாய் வெட்டுவதற்கு ஒரு வரைபடம் வரைந்து கொண்டு மலை மேலிருந்து கிராமத்திற்கு மூன்று கிமீ தூரத்திற்கு ஒரு கால்வாயைத் தோண்டினார். அவ்வாறு ஓராண்டு காலம் அல்ல… இரண்டு ஆண்டு காலம் அல்ல… ஒரேயடியாக 30 ஆண்டுகாலம் தனி ஒருவராக உழைத்தார்.

ஆகஸ்ட் மாதத்தில் கால்வாய் முழுமையடைந்தது. சுற்றுப்புறத்தில் இருக்கும் மூன்று கிராமங்களுக்கு தற்போது முழுமையாக நீர் வசதி கிடைத்துள்ளது. இதனால் வெளியூர்களுக்குச் சென்ற மக்கள் திரும்ப சொந்த கிராமத்திற்கு வருவதாகவும் தெரிவித்தார்.

ஆடுகளை மேய்த்துக்கொண்டு நேரம் கிடைக்கும் போதெல்லாம் கால்வாய் தோண்டியதாக கூறினார். லௌங்கீ பூயியா தோண்டிய கால்வாய் பற்றிய செய்தி சோஷல் மீடியாவில் வைரல் ஆனது.

மஹேந்திரா குரூப் சேர்மன் ஆனந்த் மகேந்திரா அது குறித்து தெரிந்து கொண்டார். ஊரின் நன்மைக்காக 30 ஆண்டுகளாக சிரமப்பட்டு தண்ணீர் கால்வாய் தோண்டிய லௌங்கீ பூயியா மீது ஆனந்த் மகேந்திரா பாராட்டு மழை பொழிந்தார்.

பூயியா தோண்டிய கால்வாய் பிரமிடுகள், தாஜ்மஹால் போன்றது என்று புகழ்ந்தார். அவருடைய முயற்சிக்கு சிறு காணிக்கையாக டிராக்டர் அளிக்கப் போவதாக அறிவித்தார்.

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

அண்மையில் மகேந்திரா குரூப் ஊழியர்கள் பீகார் மௌன்டன் மேன் லௌங்கீ பூயியா வுக்கு டிராக்டரை அளித்தார்கள். தற்போது அது தொடர்பான போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img