செப் 22: தமிழகத்தில் இன்று… 5337 பேருக்கு கொரோனா; 76 பேர் உயிரிழப்பு!

Published:

corona-image
corona-image

இன்று 5337 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒரே நாளில் 76 பேர் உயிரிழந்தனர் என்று சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது 

தமிழகத்தில் இன்று மேலும் 5337 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,52,674  ஆக அதிகரித்துள்ளது 

சென்னையில் புதிதாக 989 பேருக்கு கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  இதையடுத்து சென்னையில் கொரானா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 157614  ஆக உயர்ந்துள்ளது 

கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரே நாளில் 76 பேர் உயிரிழந்தனர். இவர்களில்32 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 44 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர் இதையடுத்து காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,947 ஆக உயர்ந்து  9 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 5,406 பேர் இன்று குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் இதையடுத்து  இதுவரை கொரோனா பாதித்து மீண்டவர்களின் எண்ணிக்கை  4,97,377  ஆக உள்ளது. 

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

தற்போது, கொரோனா பாதிப்பு காரணமாக, மாநிலம் முழுவதும் மொத்தம் 46, 350 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்:

district-wise-covid-details-sep-22
district-wise-covid-details-sep-22

Related articles

Recent articles

spot_img