மருத்துவர்கள் குறித்த கண்ணோட்டம் மாற வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
telangana-governor-tamilisai-soundarrajan
telangana-governor-tamilisai-soundarrajan

மருத்துவர்கள் குறித்து மக்களின் கண்ணோட்டத்தில் மாற்றம் வரவேண்டும் என்றும் அவர்களுடைய சேவைகளையும் அவர்களுடைய துயர்களையும் மக்கள் அடையாளம் காணவேண்டும் என்றும் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் குறிப்பிட்டார்.

மருத்துவர்கள் மீது நோயாளிகளின் உறவினர்கள் தாக்குதல் நடத்துவது குறித்து அவர் கவலை தெரிவித்தார். மருத்துவர்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்துவதோடு இதுபோன்ற வழக்குகளில் குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று மத்திய அரசாங்கம் அண்மையில் புது சட்டத்தை எடுத்து வந்து உள்ளது என்று குறிப்பிட்டார்.

இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் ஆன்லைன் மூலம் நடத்திய அகாடமி ஆஃப் மெடிக்கல் ஸ்பெஷலிடீஸ் கான்வகேஷனில் முக்கிய விருந்தினராக பங்குகொண்டு அவர் உரையாற்றினார்.

மருத்துவர்கள் திறம்பட தம் சேவைகளை அளித்து வருவதால் நாட்டில் கொரோனா மரணங்களின் சதவிகிதம் (சிஎஃப்ஆர்) மிகவும் குறைந்துள்ளது என்று அவர் கூறினார்.

கொரோனா பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் மரணங்களின் ரேட் 15 சதவீதம் இருப்பது குறித்து அவர் கவலை தெரிவித்தார்.

ஐஎம்ஏ தேசிய தலைவர் ராஜன் சர்மா, செக்ரடரி ஜெனரல் அசோகன், ஐஎம்ஏ வைஸ் சேர்மன் அஷ்ரப், தெலங்காணா ஸ்டேட் மெடிகல் கவுன்ஸில் சேர்மன் ரவீந்தர் ரெட்டி இதில் பங்கு கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + fifteen =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.