மாணவர்களின் கனவே நாட்டின் எதிர்காலம்: பிரதமர் மோடி!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
pm-modi
pm-modi
  • மாணவர்களின் கனவே நாட்டின் எதிர்காலம்…பிரதமர் மோடி.
  • ஐஐடி கௌஹாத்தி மாணவர்களை முன்னிட்டு மோடி சொற்பொழிவு.

இன்று நீங்கள் காணும் கனவுகள் இந்தியாவின் வடிவத்தையே மாற்றக் கூடியவை என்று பிரதமர் நரேந்திர மோடி ஐஐடி கௌஹாத்தி மாணவர்களிடம் உரையாற்றினார்.

அந்த கல்வி அமைப்பின் 22 வது பட்டமளிப்பு விழாவின் ஒரு பகுதியாக வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாற்றினார்.

பட்டமளிப்பு விழா ஒவ்வொரு மாணவருக்கும் சிறப்பான நாள் என்று கூறினார். இது தொடர்பாக பிரதமர் தற்போதைய உண்மையான சூழ்நிலையை வெளிப்படுத்தி, புத்துணர்ச்சி நிரப்புவதாக உரையாற்றினார்.

பட்டமளிப்பு விழா ஒவ்வொரு மாணவனுக்கும் பிரத்தியேகமான நாள். கொரோனா தொற்றுநோய்ப் பரவல் காரணமாக இந்த ஆண்டு தனிப்பட்ட அனுபவத்தை எதிர்கொண்டுள்ளோம். ஆனால் எப்போதும் போலவே இந்த விழா சிறப்பானது. உங்கள் ஒளிமயமான எதிர்காலத்திற்காக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைய நாள் இளைஞர் எதை எண்ணுவார்களோ அதுவே நாளைய நாட்டின் முன்னேற்றத்திற்கு உரியது என்று நான் திடமாக நம்புகிறேன். உங்கள் கனவுகள் இந்தியாவின் வடிவத்தையே மாற்றக்கூடியவை.

இந்த நேரத்தில் கூட ஆராய்ச்சிகளும், பாடங்களைக் கற்பித்தலும் நடந்துவருவது எத்தனை கடினம் என்பதை என்னால் அறிய முடிகிறது. ஆனால் நீங்கள் வெற்றியை சாதித்து உள்ளீர்கள். நாட்டின் தற்சாற்பு நோக்கி நீங்கள் செய்யும் முயற்சியை நான் பாராட்டுகிறேன்.

அதேபோல் புதிய கல்வி முறையில் உங்களைப் போன்ற மாணவர்கள் விரும்பும் பல அம்சங்களை சேர்த்துள்ளோம். இதனால் மாணவர்கள் தொழில் நுட்பங்களை தொழில்நுட்பம் மூலமாகவே கற்றுக் கொள்ள உள்ளார்கள்.

புதிதாக எடுத்து வந்துள்ள மல்டி டிசிப்ளினரி முறை மூலம் எந்த பாடத்தையும் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அதுமட்டுமின்றி இந்தியா பிற வெளிநாட்டு மாணவர்களுக்கு ஒரு இலக்காக மாறப்போகிறது என்று இந்த சந்தர்ப்பத்தில் புதிய கல்வி முறை குறித்து முக்கியமாக விளக்கினார்.

அப்போது வடகிழக்கு பிரதேசத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார். வட கிழக்கு பிரதேசம் ஆக்ட் ஈஸ்ட் பாலிசிக்கு நிலையமாக உள்ளது என்றும் இந்தியா தென்கிழக்கு ஆசியா நாடுகளுக்கு ஒரு கேட்வேயாக பணிபுரிகிறது என்றும் குறிப்பிட்டார்.

அதேபோல் விபத்து நிர்வாகம், மற்றும் விபத்துகளை குறைப்பதற்கு ஒரு மையத்தை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஐஐடி கௌஹாத்தியை இதன் தொடர்பாக பிரதமர் கோரினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − three =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.