ஆந்திரா: கோவில் கோபுர கலசத்தை சிதைத்த ‘காட்டுமிராண்டிகள்’!

Published:

tarlupadu-veerabarda-swami-temple
tarlupadu-veerabarda-swami-temple

ஆந்திர மாநிலத்தில் பிரகாசம் மாவட்டம் தர்லுபாடு கிராமத்தில் உள்ள புராதனமான ஸ்ரீ வீரபத்திர சுவாமி ஆலய கலசத்தை சனிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத மனிதர்கள் சிதைத்துள்ளார்கள்.

இதுகுறித்து ஞாயிறன்று எஸ்பி சித்தார்த்த கௌசல் மற்றும் சிஐகள் வி ஶ்ரீராம், கேவீ ராகவேந்திரா சம்பவ இடத்தை சென்று சோதனை இட்டனர். புதையலுக்காக கோபுரக் கலசத்தை நீக்கிவிட்டு தேடி உள்ளதாக எஸ்பி சித்தார்த் தகவல் வெளியிட்டார்.

ஆலயத்தின் கோபுரம் மேல் உள்ள கலசத்திற்கு மஞ்சள் குங்குமம் தடவி பூஜை செய்துவிட்டு அதை சுற்றி உள்ள கான்க்ரீட்டை நீக்கி இருக்கிறார்கள்.

புராதனமான வீரபத்திர சுவாமி ஆலயத்தில் கலசத்தை ஸ்தாபித்த போது அதில் ஏதாவது மதிப்பு மிகுந்த பொருட்கள் இருக்கும் வாய்ப்பு இருந்தால் அதை திருடி கொள்ளலாம் என்ற உத்தேசத்தோடு திருடர்கள் அந்த வேலையை செய்து உள்ளார்கள் என்று போலீஸார் சந்தேகத்தை வெளியிட்டார்கள்.

உள்ளூர் பிஜேபி தலைவர்கள் ஞாயிறு அன்று இரவு ஆலயம் அருகில் வந்து சற்று நேரம் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு
tarlupadu-veerabarda-swami-temple-protest
tarlupadu-veerabarda-swami-temple-protest

மறைத்து வைத்த புதையல் இருக்கும் என்ற எண்ணத்தில் பிரகாசம் மாவட்டத்தில் கோவிலின் கோபுர கலசத்தை சிதைத்திருப்பார்கள் என்பது போலீசாரின் சந்தேகம்.

பல நூற்றாண்டு கால வரலாறு படைத்த வீரபத்திர சுவாமி ஆலய கலசத்திற்கு பூஜைகள் செய்துவிட்டு திருட்டு நடத்தியுள்ளது புதையலுக்காகவே என்று மாவட்ட எஸ்பி சித்தார்த் கௌசல் தகவல் தெரிவித்தார்.

தர்லுபாடு கிராமத்தில் உள்ள இந்த கோவில் மிகவும் புகழ் வாய்ந்தது. ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் உற்சவங்களுக்கு கர்னூல், குண்டூர் மற்றும் பிற இடங்களில் இருந்தும் பெரிய அளவில் பக்தர்கள் வந்து சேர்வார்கள்.

tarlupadu-veerabarda-swami-temple1
tarlupadu-veerabarda-swami-temple1

ஆலய கலசத்தை சிதைத்தார்கள் என்ற விஷயம் அறிந்த உள்ளூர் பிஜேபி தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். சற்று நேரம் பரபரப்பு நிலவியது. இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை விரைவில் பிடித்து விடுவோம் என்று போலீஸ் உயர் அதிகாரிகளிடம் இருந்து உத்தரவாதம் வந்த பின்பே நிலைமை சீரானது. திருடர்களை பிடிக்க தனி குழு அமைத்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

அண்மையில் ஆந்திர பிரதேசத்தில் உள்ள பல கோவில்களில் இதுபோன்ற விரும்பத்தகாத செயல்கள் நடந்து வருவது வருத்தத்துக்குரியது.

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img