தன் மீதான பொய்ப் பிரசாரங்களுக்கு முடிவு கட்டிய பி.வி.சிந்து!

Published:

pvsindhu
pvsindhu
  • என் பெற்றோரின் அனுமதியுடன்தான் இங்கிலாந்து சென்றேன். பிவி சிந்து.
  • பொய்ப் பிரச்சாரங்களுக்கு முடிவு கட்டிய பிவி சிந்து.
  • தன்னைப் பற்றி பிரச்சாரமாகும் கதைகள் மீது பேட்மிட்டன் வேர்ல்டு சேம்பியன் பூசர்ல வெங்கட சிந்து பதிலளித்தார்.

தன் பெற்றோரின் அனுமதியோடு தான் லண்டன் சென்றதாகவும் அதேபோல் கோச் கோபிசந்தோடு தனக்கு எந்தவித அபிப்ராய பேதமும் இல்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

பொய்க் கதைகளை பிரச்சாரம் செய்வதை நிறுத்த வேண்டும் என்றும் இல்லாவிட்டால் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் எச்சரித்தார்.

பிவி சிந்து தற்போது லண்டனில் உள்ளார். ஃபிட்னஸ் மீது அதிக கவனம் செலுத்திவரும் பிவி சிந்து ஜி எஸ் எஸ் ஐ யோடு (கடோரெட் ஸ்போர்ட்ஸ் சயின்ஸ் இன்ஸ்டிடியூட்) சேர்ந்து பணிபுரிகிறார். இதுதொடர்பான போட்டோக்களை அண்மையில் சோஷியல் மீடியாவில் பகிர்ந்தார்.

இதுகுறித்து… பிவி சிந்து நேஷனல் கேம்பை விட்டுவிட்டு சென்றுவிட்டார் என்றும் குடும்பத்தாரோடு ஏற்பட்ட தகராறு காரணமாகவே இந்த முடிவு எடுத்துள்ளார் என்றும் ஒரு தேசிய மீடியா பொய் பிரச்சாரங்களை பரப்பியது. இந்த செய்திகளை தீவிரமாக கண்டித்த சிந்து செவ்வாயன்று இன்ஸ்டாகிராமில் அவைகளுக்கு ஒரு முடிவு கட்டினார்.

நியூட்ரிஷன் மற்றும் ரெக்கவரி தேவைகளுக்காக சில நாட்களுக்கு முன் நான் லண்டனுக்கு வந்தேன். என் பெற்றோரின் அனுமதியோடு தான் இங்கு வந்தேன். குடும்பத்தோடு எனக்கு எந்தவித அபிப்ராய பேதமும் இல்லை. என் நன்மைக்காக என் பெற்றோர் எத்தனையோ தியாகங்களை செய்துள்ளார்கள். என்னை இந்த நிலைமைக்கு அழைத்து வந்த அவர்களோடு எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

என் குடும்பத்தாரோடு எனக்கு நல்ல தொடர்பு உள்ளது. அவர்களின் சப்போர்ட் எனக்கு எப்போதும் உள்ளது. தினமும் என் குடும்பத்தாரோடு நான் போனில் பேசி வருகிறேன். அதுமட்டுமின்றி என் கோச் மாஸ்டர் கோபிசந்து மற்றும் அவருடைய அகாடமியின் சௌகரியங்கள் விஷயத்திலும் கூட எனக்கு எந்தவித வருத்தமும் இல்லை என்று தெளிவு படுத்தினார்.

அதேபோல் உண்மையை தெரிந்து கொள்ளாமல் பொய் பிரச்சாரங்கள் செய்தால் சும்மா இருக்க மாட்டோம் என்றும் எச்சரித்தார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img