நாயினி நரசிம்மா ரெட்டியின் இறுதிச் சடங்கில்… பிக்பாக்கெட் திருடன்!

Published:

pickpocket
pickpocket

பலரின் பாக்கெட்டுகள் காலி. பிக்பாக்கெட் திருடன் ஒரு கட்சி தலைவரின் பையிலிருந்து பர்சை திருடும்போது பிடிபட்டான். உடனே கட்சித் தலைவர் திருடனை பிடித்தார். அனைவரும் சேர்ந்து அடித்து நொறுக்கி போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

முன்னாள் உள்துறை அமைச்சர் நரசிம்மா ரெட்டியின் அந்திமகிரியைகளின் போது பிக்பாக்கெட் திருடர்கள் புகுந்து விளையாடினார்கள். அபிமான தலைவர் மரணத்திற்கு தொண்டர்களும் டிஆர்எஸ் கட்சி ஆதரவாளர்களும் வருத்தத்தில் இருந்தபோது… இப்படிப்பட்ட துயரமான சம்பவத்தின் போது கூட பிக்பாக்கெட் திருடர்கள் தம் கைவரிசையைக் காட்டினார்கள்.

pickpocket1
pickpocket1

பல கட்சித் தலைவர்களின் பாக்கெட்டுகளில் உள்ள பணத்தை கொள்ளையடித்து தம் பாக்கெட்டுகளில் நிரப்பிக் கொண்டார்கள். அந்த வரிசையில் ஒரு கட்சித் தலைவரின் பாக்கெட்டில் இருந்து பர்சை திருடும்போது கட்சி தலைவர் திருடனைப் பிடித்து விட்டார். அனைவரும் சேர்ந்து அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவனிடமிருந்து மூன்று ஆயிரத்துக்கு மேலாக பணம் கைப்பற்றினர். இந்த கூட்டத்தை சேர்ந்த மேலும் இருவருக்காக போலீசார் தேடி வருகின்றனர்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

முன்னாள் அமைச்சர் நரசிம்மா ரெட்டியின் இழப்பால் டிஆர்எஸ் கட்சி சோகக் கடலில் மூழ்கியுள்ளது. தம் பிரியமான தலைவரை இழந்தது குறித்து தொண்டர்களும் ஊழியர்களும் கண்ணீர் விட்டு கதறினர். நாயினிக்கு இறுதி முறையாக விடை கொடுப்பதற்காக நூற்றுக்கணக்கில் டிஆர்எஸ் தலைவர்கள் அங்கு வந்தார்கள்.

நகரத்தில் உள்ள மகா பிரஸ்தானம் மயானத்தில் அந்திமக் கிரியைகள் நடந்து முடிந்தன. நரசிம்மா ரெட்டியை நினைவு கூர்ந்து தலைவர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள. அதேசமயம் பிக்பாக்கெட் சம்பவம் சற்று நேரம் அங்கே பரபரப்பை ஏற்படுத்தியது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img