சுபாஷிதம்: நட்பை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்!

Published:

subhashitam
subhashitam

சுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!

தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

22. நட்பை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்!

ஸ்லோகம்:

இச்சேத்யேன ஸ்திராம் மைத்ரீம் த்ரீணி தத்ர ந காரயேத்|வாக்வாதம் அர்தசம்பந்தம் தத் பத்னீபரிபாஷணம்||

பொருள்

நிலையான நட்பை விரும்புபவர்கள் நண்பர்களோடு இந்த மூன்று செயல்களிலும் ஈடுபடக்கூடாது. வாக்குவாதம், பணம் கொடுக்கல் வாங்கல்கள், நண்பனின் மனைவியிடம் அனாவசிய பேச்சுகள்.

விளக்கம்:

நண்பர்களை சம்பாதிப்பது என்பது ஒரு கலை. அந்த நட்பை நிலைநிறுத்திக் கொள்வது என்பது சற்று கடினமான பணி. இரு நண்பர்கள் இடையே நட்பு கெடாமல் இருக்க வேண்டும் என்றால் கவனம் செலுத்த வேண்டியவை மூன்று உள்ளன. அவை குறித்து விவரிக்கும் புகழ்பெற்ற செய்யுள் இது. சண்டைக்கு இந்த மூன்றும் காரணங்கள். ஜாக்கிரதை என்று எச்சரிக்கிறது.

இரண்டு பேரின் அபிப்பிராயங்கள் வேறுவேறாக இருக்கும்போது வரும் வாக்குவாதங்கள் சிறு காற்று பெரும் புயலானது போல நட்பைக் கெடுத்து விடும். நண்பர்களிடையே வாக்குவாதங்கள் இருக்கக்கூடாது. உரையாடல்கள் இருக்கலாம்.

ALSO READ:  2047ம் ஆண்டுக்குள் நாம்... : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

அடுத்து பணம். பண விஷயத்தில் கொடுக்கல் வாங்கல் எப்போதுமே இருவர் இடையே சண்டை மூட்ட கூடியது. வியாபாரத்தில் பங்குதாரர்கள் பிரிந்து போவதை சர்வ சாதாரணமாக பார்க்கிறோம். அதற்குக் காரணம் இதுதான். ‘மாதா புத்ர விரோதாய ஹிரண்யாய நமோநம:’ – தாய்க்கும் தனயனுக்கும் இடையே பகையை ஏற்படுத்தும் பணமே! உனக்கு நமஸ்காரம்! என்கிறார் ஒரு கவிஞர்.

ஆனால் நண்பர்களிடையே இருக்கவேண்டிய குணங்களில் கொடுக்கல்-வாங்கல் கட்டாயம் இருக்கும். ஏனென்றால் நண்பனின் தேவைக்கேற்ப பண உதவி செய்ய வேண்டும். அது கூட முறையாக, கவனத்தோடு, எழுத்துப்பூர்வமான நடைமுறையோடு விளங்க வேண்டும். அது விரோதத்தை வளர்க்காது. அடுத்து கடைசியாக பெண்கள் பற்றி குறிப்பிடுகிறார் சுபாஷிதக்காரர். நண்பனின் மனைவி மனம் வருந்தும்படி பேசுவது விரோதத்திற்கு வழிகோலும் என்று எச்சரிக்கிறார். அவளுக்கு தன் கணவன் மீதும் நண்பன் மீதும் கௌரவத்தை வளர்க்கும் உரையாடலை வரவேற்கலாம்.

ஆனால் அனாவசிய விஷயங்கள் பற்றிப் பேசுவது பகைக்கு காரணம் ஆகும் என்பது இந்த செய்யுளின் தாத்பரியம். இந்த மூன்றிலும் கவனத்தோடு இருந்து ஆபத்துகளில் சிக்காமல் நட்பை வாழ்நாள் முழுவதும் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img