- சிறுவனின் கடத்தல் சோகத்தில் முடிந்தது. குற்றவாளியைக் கண்டுபிடித்த போலீசார்.
- தெலங்காணா மகபூபாபாத் சிறுவனின் கிட்நாத் வழக்கு சோகத்தில் முடிந்தது.
தீக்ஷித்ரெட்டியை கடத்திய குற்றவாளியை போலீசார் நான்கு நாட்களுக்கு பிறகு கண்டுபிடித்தார்கள். ஆனால் சிறுவனின் உயிரை காப்பாற்ற இயலவில்லை.
கடத்தலுக்கு ஆளான நான்கு நாட்களுக்கு பிறகு சிறுவனின் உடலை போலீசார் அடையாளம் கண்டார்கள். மகனின் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் கண்ணீர் கடலில் மூழ்கினர். அங்கு கூடிய உறவினர்களும் உள்ளூர் வாசிகளும் கதறியழுத காட்சி மனதை கலக்குவதாக உள்ளது.
மகபூபாபாத் கிருஷ்ணா காலனியில் ரஞ்சித், வசந்தா தம்பதிகள் வசித்து வருகிறார்கள். இவர்களின் மூத்த மகனாகிய தீக்ஷித் ரெட்டி (9 வயது) வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது ஞாயிறன்று மாலை மந்தா சாகர் என்பவன் தன் மோட்டர் பைக்கில் வந்து சிறுவனை அழைத்துச் சென்றான். அந்த காட்சிகள் சிசி டிவியில் பதிவாகியுள்ளன. அந்த நபர் தன் தந்தைக்கு தெரிந்தவர் ஆதலால் சந்தேகம் இன்றி, ‘ஒரு ரைட் போய் வரலாம்’ என்றதும் ஏறி உட்கார்ந்தான் சிறுவன். சிறுவனின் தந்தை ரஞ்சித் ரெட்டி தெலுங்கு டிவி ‘டிநியூஸ் ‘ சேனலில் ரிபோர்டராக பணிபுரிகிறார்.
சிறுவன் தன்னை வீட்டுக்கு அழைத்துச்செல்லும்படி அழுததால் குடிதண்ணீரில் தூக்க மாத்திரை போட்டு அவனுக்குக் கொடுத்து மயக்கமடையச் செய்தான். அவன் தன் பெயரை பெற்றோரிடம் சொல்லி விடுவான் என்ற பயத்தால் கழுத்தை முறித்து கொன்றுவிட்டான். பின் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விட்டான்.
இரவு வரை தேடியும் பெற்றோரால் மகனை கண்டுபிடிக்க முடியவில்லை. குற்றவாளி சிறுவனின் பெற்றோருக்கு போன் செய்து ரூ 45 லட்சம் கொடுத்தால் சிறுவனை விடுவித்து விடுவதாக பேரம் பேசினான். விஷயத்தை யாருக்கும் சொல்லக்கூடாது என்று எச்சரித்தான். விரைவில் பணம் கொண்டு தருவதாகவும் சிறுவனை எதுவும் செய்து விட வேண்டாம் என்றும் பெற்றோர்கள் கண்ணீர் விட்டனர்.
உடனுக்குடன் போலீசாரிடம் தெரிவித்தனர். வீட்டை அடமானம் வைத்து பணத்தை சேகரித்தனர். குற்றவாளி வீடியோவில் பணத்தை எண்ணி காட்டும்படியும் உண்மையிலேயே பணத்தை சேகரித்து விட்டீர்களா என்றும் கேட்டான். ஒரு இடத்திற்கு வரச் சொன்னான். பணத்தை எடுத்துக்கொண்டு சென்று 9 மணிநேரம் காத்திருந்தார்கள். அங்கு வந்த நபரை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். வியாழன் காலையில் வீட்டிலிருந்து ஐந்து கிமீ தொலைவிலிருந்த காட்டில் போலீசார் சிறுவனின் இறந்த உடலை கண்டறிந்தனர்.
எளிதாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமே இந்த கடத்தலுக்கு காரணமாக இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். நேற்று மாவட்ட எஸ்பி கோடிரெட்டி குற்றவாளி மந்தா சாகரை செய்தியாளர்கள் முன்பு நிறுத்தி விவரங்களை தெரிவித்தார்.
கார் மெகானிக்காக பணிபுரியும் மந்தா சாகர் போன்கால் டிரேஸ் செய்ய முடியாதபடி நெட்வொர்க் தொழில்நுட்ப உதவியோடு செயல்பட்டதால் மேலும் அவனுக்கு உதவியவர்கள் யார் என்ற கோணத்தில் போலீசார் தேடி வருகிறார்கள்.