
திருமாவளவன் இந்து பெண்களை கொச்சைப்படுத்தி பேசி உள்ளது கொச்சையானது. கண்டிக்கத்தக்கது. இந்து மதத்தை கொச்சைப்படுத்துவதை மட்டுமே நோக்கமாக வைத்துக்கொண்டு இங்குள்ள சில அரசியல் கட்சி செயல்படுவது வேதனையானது. அதை பல இந்துக்கள் கண்டு கொள்ளாமல் கடப்பது அதை விட வேதனையானது.
இனியும் இந்து துவேசத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாது. பொங்கி எழுவோம் ! நணபர்கள் பலரும் complaint format கேட்டிருந்தீர்கள் . கீழே கொடுத்துள்ளேன். தமிழகம் முழுதும் புகார் அளிப்போம். அது மட்டும் போதாது. திருமாவளவன் பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை விடக் கூடாது… என்று தெரிவித்துள்ளார் பாஜக.,வைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வத்தாமன்.
அவர் தாம் அனுப்பியுள்ள புகார் குறித்த விவரத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
புகார் விபரம் :
தேதி: 23.10.2020.
அனுப்புதல்:
அ.அஸ்வத்தாமன்,
மாநில செயலாளர்,
வழக்கறிஞர் பிரிவு,
பாரதிய ஜனதா கட்சி,
பெறுதல்:
உயர்திரு. காவல்துறை ஆணையர்,
சென்னை.
பொருள்: மதரீதியாக பிரிவுகளுக்கு இடையே பகைமையை தூண்டுதல் , ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் நம்பிக்கைகளை அவமானப்படுத்தி அதன் மூலமாக வேண்டுமென்றே மத உணர்வுகளை தூண்டி ஒரு குறிப்பிட்ட மதத்தினரை சினம் ஊக்கமூட்டி , மத அமைதியை குலைத்தல், கொச்சையான வார்த்தைகளை பேசி வேண்டுமென்றே மத ரீதியான எண்ணங்களை, நம்பிக்கைகளை அவமானப் படுத்தும் நோக்கத்தில் வெளியிடுதல், வேண்டுமென்றே அவமானப்படுத்தும் வகையில் பேசி அதை காட்சிப்படுத்துதல்,அதன்மூலம் குறிப்பிட்ட மதத்தினரை அவமானப்படுத்தி அதன்மூலம் அவர்களைத் தூண்டி பொது அமைதியை சீர்குலைக்க முயற்சித்தல், உண்மைக்கு புறம்பான அடிப்படையற்ற பொய்யான வதந்திகளை மக்களிடையே பரப்பி, அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை தூண்டி, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சித்தல், ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மீது அவதூறு பரப்புதல் ,அவதூறாக கொச்சையாக காட்சிப்படுத்துதல் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிடுதல், பெண்களின் மாண்பை கொச்சைப்படுத்துதல், சமூக வலைதளங்களில் கொச்சையாக பதிவிடுதல் ஆகிய குற்றங்களுக்காக திருமாவளவன் மற்றும் பெரியார் you tube channel நடத்துவர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோருதல்- சார்பு
Link :
https://youtu.be/62rXrhLtPvw
மேற்கண்ட link ல் திருமாவளவன் என்ற நபர் ” இந்து பெண்கள் அனைவருமே விபச்சாரிகள் தான் ” என்று கொச்சையாக பேசியுள்ளார் . மேலும் , இந்து சாஸ்திரங்களில் இது போன்று இருப்பதாக ஒரு பொய்யான, அவதூறான கருத்தை பதிவேற்றியுள்ளார்.
இது வேண்டுமென்றே ஒரு மதத்தினரின் மனதை புண்படுத்தும் நோக்கத்திலும், மதரீதியாக பிரிவுகளுக்கு இடையே பகைமையை தூண்டும் வகையிலும் ,அதன் மூலம் பொது அமைதியை கெடுக்கும் வகையிலும் ஒரு மதத்தினரின் மனதை புண்படுத்தும் வகையிலும், அவ்வாறு புண்படுத்தி அதன்மூலம் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், இந்து பெண்களை கொச்சைப்படுத்தி அதன் மூலமாக ஒரு குறிப்பிட்ட மதத்தினரை அவமானப்படுத்தும் நோக்கத்திலும், ஒரு குறிப்பிட்ட மதத்தினரை கொச்சைப்படுத்தி அதன் மூலமாக வேண்டுமென்றே மத உணர்வுகளை தூண்டி ஒரு குறிப்பிட்ட மதத்தினரை சினம் ஊக்கமூட்டும் நோக்கத்திலும் , மத அமைதியை குலைக்கும் வகையிலும், கொச்சையான காட்சிப்படுத்தல் மூலம் வேண்டுமென்றே மத ரீதியான எண்ணங்களை, நம்பிக்கைகளை அவமானப் படுத்தும் நோக்கத்தில் வெளியிடும் வகையிலும், வேண்டுமென்றே அவமானப்படுத்தும் வகையில் குறிப்பிட்ட மதத்தினரை அவமானப்படுத்தி அதன்மூலம் அவர்களைத் தூண்டி பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், உண்மைக்கு புறம்பான அடிப்படையற்ற பொய்யான வதந்திகளை மக்களிடையே பரப்பி, அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை தூண்டி, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் வகையிலும், பெண்களின் மாண்பை கொச்சைப்படுத்தும் வகையிலும் வேண்டுமென்றே பதிவிடப்பட்டுள்ளது.
எனவே, மேற்குறிப்பிடப்பட்டுள்ள திருமாவளவன் மற்றும் பெரியார் you tube channel ஐ நிர்வகிப்பவர்கள் ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 153(A), 295 , 295(A), 296 ,298 ,499, 504, 505, 509, 188 மற்றும் 67 IT ACT உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சட்டப்படியான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
என்றும் தேசப்பணியில் ,
அ.அஸ்வத்தாமன்