சச்சின் கடைசி டெஸ்டில் பயன்படுத்திய உடை: ரூ.6 லட்சத்துக்கு ஏலம்

இந்தியா

sachin-dressஜோத்புர்: சச்சின் டெண்டுல்கர் கடைசி டெஸ்டில் பயன்படுத்திய உடை ரூ.6 லட்சத்துக்கு ஏலம் போனது. இந்திய கிரிக்கெட்டின் முடி சூடா மன்னனாகத் திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர், கடந்த 2013-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதற்கு முன்னதாக், அவர் கடைசியாக 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் நடைபெற்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்றார். அது அவரது 200-வது டெஸ்ட் போட்டியாகும். அவருக்கு பிரிவு உபசாரமாக நடைபெற்ற அந்த டெஸ்க் போட்டியில் அவர் பயன்படுத்திய சிறப்பு வாய்ந்த உடை சனிக்கிழமை இரவு ஜோத்பூரில் ஏலம் விடப்பட்டது. அந்த உடையை ரூ.6 லட்சத்துக்கு, ஜோத்பூர் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த ஷிவ் ராஜ்சிங் என்பவர் வாங்கினார். இதேபோல் மேலும் பல நினைவுப் பொருட்கள் ஏலம் விடப்பட்டன. இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் தொகை அறக்கட்டளைக்கு ஒன்றுக்கு வழங்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.