மண்டல பூஜைக்கு நவ.15ல் சபரிமலை நடை திறப்பு! பக்தர்களுக்கு அனுமதி!

ஆன்மிகச் செய்திகள் இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
SABARIMALAI NADI
SABARIMALAI NADI

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்கு நவம்பர் 15ஆம் தேதி மாலை கோவில் நடை திறக்கப்படுகிறது. நவம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் 26ம் தேதி வரை மண்டல பூஜைக்கு பக்தர்கள் அனுமதிக்கப் படுவார்கள்.

டிசம்பர் 30ஆம் தேதி முதல் ஜனவரி 20ஆம் தேதி வரை மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை நடை திறந்திருக்கும்.
டிசம்பர் 26ஆம் தேதி தங்க அங்கியுடன் மண்டல பூஜை நடைபெறும்.. ஜனவரி 14ஆம் தேதி மகரவிளக்கு பூஜை என தேவசம்போர்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வாரத்தின் முதல் 5நாட்கள் 1000 ஐயப்ப பக்தர்கள் அனுமதிக்கப் படுவார்கள். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை 2 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப் படுவார்கள்.

பக்தர்கள் அனைவருமே தங்களுக்கு கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் அளிக்க வேண்டும். சபரிமலையில் பணியாற்றும் அனைவருக்கும் கோவிட்-19 சான்றிதழ் கட்டாயம்!

சிறிய வாகனங்கள் பம்பா வரை செல்ல அனுமதி அளிக்கப் படுகிறது. அதே நேரம், பெரிய வாகனங்கள் நிலக்கல் வரை மட்டுமே அனுமதிக்கப் படும்.

நிலக்கல், பம்பா, சன்னிதானம் ஆகிய இடங்களில் குளியலறை மற்றும் கழிப்பறை ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. பம்பா நதியில் குளிக்க அனுமதி இல்லை, பக்தர்கள் செயற்கை மழையில் குளிக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

சன்னிதானத்தில் தங்குவதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கோவிட் 19 முழுமையான விதிமுறைகளை பின்பற்றப்படும் என்று, திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.