புல்வாமா தாக்குதலை நடத்தியது.. பாக்., பிரதமர் இம்ரான் கான் சாதனை! போட்டுடைத்தார் அமைச்சர்!

Published:

pakistan-parliament
pakistan-parliament

ஜம்மு-காஷ்மீரில் புல்வாமாவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியது தாங்கள் தான் என்றும், அது பிரதமர் இம்ரான் கானின் சாதனை என்றும் பாகிஸ்தான் அமைச்சர் நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.

kashmir blast
kashmir blast

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அமைச்சரவை சகா ஃபவாத் சவுத்ரி நாடாளுமன்றத்தில் பேசுகையில், புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதல், இம்ரான் கானின் மிகப்பெரிய வெற்றி என்று வர்ணித்துள்ளார். இது 24 மணி நேரத்திற்குள் பாகிஸ்தானிடம் இருந்து வரும் இரண்டாவது ஒப்புதல் வாக்குமூலம்.

ALSO READ | புல்வாமா போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழும்: நாங்கள் தாக்குவோம்: மிரட்டுகிறார் இம்ரான் கான்!

முன்னதாக பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினரும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (ந்வாஸ்)கின் தலைவரும் ஆன அயாஸ் சாதிக், இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தனை இந்தியா தாக்குதல் நடத்தும் என்ற அச்சத்தில் பாகிஸ்தான் உடனே விடுவித்ததாக அம்பலப்படுத்தினார்.

ALSO READ | “அபிநந்தனை உடனே விட்டு விடுவோம்… இல்லை எனில் 9 மணிக்கு இந்தியா தாக்கும்!”

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

நாடாளுமன்றத்தில் பேசிய அவர் “ இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தன் பிடிபட்ட போது, பாகிஸ்தானில் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. அப்போதும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி கூட்டத்தில் பங்கேற்றார். அந்தக் கூட்டத்தில் இம்ரான் கான் பங்கேற்கவில்லை. அப்போது அறைக்குள் ராணுவ தளபதி நுழைந்த போது அவரது கால்கள் நடுங்கின. அவருக்கு வியர்த்துக் கொட்டியது.

தயவு செய்து அபிநந்தனை விடுவித்து விடுங்கள். இல்லை என்றால், இந்தியா இரவு 9 மணிக்கு தாக்குதல் நடத்தும் என்று கூறினார். அந்தக் காட்சி இன்னும் எனக்கு நினைவில் உள்ளது என்று அந்தப் பின்னணியை பகிரங்கமாகக் கூறினார்.

ALSO READ |புல்வாமா தாக்குதலுக்கு பின்… பாகிஸ்தான் இரட்டை முகத்துடன் உள்ளது!

இதற்கு பதிலளிக்கும் விதமாகப் பேசிய பாகிஸ்தான் அமைச்சர், ஃபவாத் சவுத்ரி வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில், “இம்ரான் அரசுதான் புல்வாமா தாக்குதலை நடத்தியது. நாங்கள் இந்தியாவுக்குள் நுழைந்து கொலை செய்துள்ளோம். புல்வாமாவில் நடந்தது இம்ரான் அரசின் மிகப்பெரிய வெற்றி” என்று பகிரங்கமாக அறிவித்தார். ஆனால் அந்த நேரம் ஒரு கொந்தளிப்பான கூக்குரல்கள் எதிர்க்கட்சிகளால் எழும்பிக் கொண்டிருந்ததால், சபாநாயகர் சவுத்ரியை மௌனமாக இருக்கவைக்க முயன்றார்.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

ALSO READ | பாகிஸ்தானுக்கு இந்தியா சம்மன்! புல்வாமா தாக்குதலுக்கு பதில் அளிக்க வேண்டும்!

பாகிஸ்தான் அவையில் மோடி மோடி என கோஷமும் எழுப்பப் பட்டது.

புல்வாமா தாக்குதல் விவகாரத்தில் காங்கிரஸ் நடத்திய பொய்ப் பிரசாரத்தை இப்போது பலரும் கண்டிக்கிறார்கள். புல்வாமா தாக்குதல் விவகாரத்தில் தாங்கள்தான் ஈடுபட்டதாக பாகிஸ்தான் இப்போது ஒப்புக் கொண்டுள்ள நிலையில் அன்று காங்கிரசார் இது தேர்தலுக்காக வேண்டுமென்றே நடத்தப்பட்டது என்று பாஜகவை குற்றம் சொல்லி செய்திகளை பரப்பினார்கள். ஒருபடி மேலே சென்று அது ஒரு விபத்து என்று கூறினார் காங்கிரசின் திக்விஜய்சிங். இப்போது அவர்களையெல்லாம் டிவிட்டர் பதிவுகளில் கலாய்த்து வருகிறார்கள் சமூக வலைத்தளவாசிகள்

தொடர்புடைய செய்திகள்

புல்வாமா தாக்குதல் – பயங்கரவாதிகளுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை

ALSO READ:  சதுரகிரி கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக மட்டும் செல்ல வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி! பயங்கரவாத முகாம்கள் மீது ராணுவம் அதிரடி!

புல்வாமா தாக்குதல் குறித்து விசாரிக்கக் கோரிய மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

காறித் துப்புகிறார்கள் காங்கிரஸின் திக்விஜய் சிங்கை..! புல்வாமா ஓர் விபத்து என்று சொன்னால்..?!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img