
ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் தவறி விழுந்து காயமடைந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் பகுதியிலுள்ள வசாய் ரோடு ரயில் நிலையத்தில் ரயில் ஒன்று புறப்பட்டது. இரண்டு பெண்கள், ஒரு ஆண் என மூன்று முதியவர்கள் ரயிலை பிடிக்க ஓடிவந்துள்ளனர்.
அப்போது ரயிலில் ஏற முயன்ற பெண் ஒருவர், கால் தடுமாறி ரயில் பெட்டிக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிக்கொண்டார்.
அப்போது உடன்சென்ற ஒருவர் அவரை வெளியே இழுக்க போராடியப்போது அவர் அடுத்தடுத்து ரயில் பெட்டிகள் அவர் மீது இடித்தது. எனினும் நல்வாய்ப்பாக அவர் நடைமேடையில் இருந்து கிழே விழவில்லை.

இதைப் பார்த்து சுதாரித்துக்கொண்ட பயணிகள், அப்பெண்ணை மீட்டனர். எனினும் அந்த ரயில் உடனே நிறுத்தப்பட்டதால் வேகமும் குறைந்தது.
இதில் அப்பெண் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரயில் புறப்பட்டபின் ஏறவோ, இறங்கவோ வேண்டாம் என அறிவுறுத்தியுள்ள அதிகாரிகள், விதிகளை மீறுவதே விபத்துக்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான காட்சிகள் ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.
#WATCH | Maharashtra: Passengers saved a woman from falling under a moving train at Vasai Road Railway Station, yesterday.
— ANI (@ANI) September 19, 2021
(Source: CCTV at the railway station) pic.twitter.com/SBvmCWWAeU