Falling-on-foot
Falling-on-foot

கர்நாடகாவில் கள்ளக்காதலியுடன் நெருக்கமாக இருந்ததை மனைவி பார்த்ததால் அவரின் காலில் விழுந்து கணவன் மன்னிப்பு கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முத்துராஜ். இவருக்கு திருமணமாகி மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் இவருக்கு லட்சுமி என்ற வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. பின் இவர்கள் தனிமையில் சந்தித்து தொடர்பிலிருந்து வந்தனர். இதனை அறிந்த முத்துராஜ் குடும்பத்தினரும் மனைவியும் இருவரையும் கண்டித்து வந்தனர். இருப்பினும் அவர்கள் இதனை கண்டு கொள்ளாமல் இருவரும் தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்து வந்தனர்.

இதேபோல் ஒரு நாள் தார்வார் தாலுகா முகதா கிராமத்திற்கு சென்ற முத்துராஜ்-லட்சுமி நெருக்கமாக இருந்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த முத்துராஜின் மனைவி மற்றும் குடும்பத்தார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு அவர்கள் கையும் களவுமாக பிடிபட்டனர். அதன்பின் இச்சம்பவம் குறித்து தார்வார் டவுன் மகளிர் காவல்நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் விசாரித்த போலீசார் முத்துராஜை தன் மனைவியுடன் சேர்ந்து வாழும்படி அறிவுரை வழங்கினார்.

ALSO READ:  புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

அதன் பின் மனம் திருந்திய முத்துராஜ் தன் மனைவியுடன் சேர்ந்து வாழ ஒப்புக்கொண்டார். அதன் பின் தான் தவறு செய்துவிட்டேன். அதை நான் இப்பொழுது உணர்ந்து விட்டேன் என்று கூறி முத்துராஜ் தனது மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினர் உறவினர்கள் என அனைவரும் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.

அவரின் இச்செயல் காவல் நிலையத்தில் ஆச்சரியத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. அதன்பின் முத்துராஜ் மனைவியுடன் தனது வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending