3 பேர் சேர்ந்து… தோழியால் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!

Published:

Allies 1 - 2026

ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவியை, ஒரு தோழியொருவர் தன்னுடைய நண்பர்களுக்கு விருந்தாக்க நடந்த முயற்சி, மாணவி தீ வைத்து எரிக்கப்பட்டார்.

உ.பி.யின் ஷாஜகான்பூரில் உள்ள சுவாமி சின்மயானந்தின் ஆசிரமத்தால் நடத்தப்படும் கல்லூரியில் பி. ஏ .இரண்டாம் ஆண்டில் ஒரு மாணவி படித்து வந்தார். அதே கல்லூரியில் படிக்கும் அந்த மாணவியின் தோழியொருத்தியுடன் அவர் நட்பாக பழகி வந்தார். அந்த தோழி அந்த மாணவியை தன்னுடைய கல்லூரி தோழர்களுக்கு விருந்தாக்க ஏற்பாடு செய்வதாக கூறி அந்த நண்பர்களை ஒரு பழத்தோட்டத்தில் காத்திருக்க சொன்னார்.

அதன் படி அவரின் கல்லூரி தோழர்கள் மூவர் அங்குள்ள ஒரு தோட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை காத்திருந்தனர். அப்போது அந்த மாணவி அவரின் வகுப்பு தோழிக்கு போன் செய்து, உடனே அங்குள்ள ஒரு தோட்டத்திற்கு வருமாறும், அங்கு அவரின் உறவினர் ஒருவர் காத்திருப்பதாக பொய் சொன்னார். அதை உண்மையென்று நம்பிய அந்த பெண் வகுப்பை கட் அடித்து விட்டு கல்லூரியின் சுவரேறி குதித்து அந்த இடத்திற்கு சென்றார். ஆனால் அப்போது அவரின் தந்தை மெயின் கேட்டில் காத்திருந்தார்.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

இந்நிலையில் அந்த தோழி சொன்ன இடத்திற்கு அந்த பெண் சென்றபோது அங்கு ஏற்கனவே காத்திருந்த மூவர் அந்த மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றனர். அப்போது அந்த பெண் அதை தடுக்க முற்ப்பட்டபோது அவர்கள் அந்த பெண்ணை தீ வைத்து எரித்தனர்.

பின்னர் அந்த பெண் 72 சதவீதம் தீக்காயங்களுடன் துணியில்லாமல் கிடந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை சிகிச்சைக்கு சேர்த்தார்கள். பின்னர் அந்த பெண் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் அந்த பெண்ணை இந்நிலைக்கு ஆளாக்கிய ஒரு பெண் உள்பட நால்வரை போலீசார் கைது செய்தனர்.

Related articles

Recent articles

spot_img