புகார் அளிக்க சென்ற பெண்! 3 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த துணை ஆய்வாளர்!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
vankodumai 1 - 2026

ராஜஸ்தானில் கணவன் வீட்டார் மீது புகார் அளிக்க சென்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த துணை ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் மாவட்டத்திலுள்ள கேர்லி காவல் நிலையத்தில் கடந்த மார்ச் 1 ஆம் தேதி பெண் ஒருவர் தன் கணவர் வீட்டார் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்துவதாக கூறி புகார் அளிக்க சென்றுள்ளார். அங்கு வேலை பார்த்து வரும் துணை ஆய்வாளர் அவரை ஏமாற்றி வீட்டிற்கு அழைத்து சென்று தொடர்ந்து 3 நாட்கள் வீட்டிற்குள் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஜெய்ப்பூர் பகுதி ஆய்வாளர் ஜெனரல் ஹவாசிங் குமாரியா விசாரணையை தொடங்கியுள்ளார்.

முதற்கட்டமாக துணை ஆய்வாளரை கைது செய்துள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்கு செல்ல மறுப்பதால் விசாரணை நீளுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.