
செங்கோட்டையில் தாமோதர் தாஸ் சமூக நல அறக்கட்டளை சார்பில் துாய்மை பணியாளா்களுக்கு எம்எல்ஏ.கிருஷ்ணமுரளி(எ)குட்டியப்பா புத்தாடைகள் வழங்கினார்.
செங்கோட்டை வண்டிமலச்சியம்மன் கோவில் அருகே உள்ள சமுதாய நலக்கூடத்தில் வைத்து தாமோதர தாஸ் சமூகநல அறக்கட்டளை சார்பில் அறக்கட்டளை நிறுவனத்தலைவரும் 14வது வார்டு நகர்மன்ற உறுப்பினருமான பொன்னுலிங்கம்(எ)சுதன் ஏற்பாட்டில் செங்கோட்டை நகராட்சி துாய்மை பணியாளா்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடை இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை உறுப்பினா் ஜமீன்முத்தக்குமார் தலைமைதாங்கினார். பொருளாளா் லஷ்மணன் முன்னிலைவகித்தார். அறக்கட்டளை உறுப்பினா் விஷ்ணுகுமார் அனைவரையும் வரவேற்றார். செயலாளா் எல்.எம்.முரளி வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினா் கிருஷ்ணமுரளி(எ) குட்டியப்பா கலந்து கொண்டு துாய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் பொன்னாடை அணிவித்து புத்தாடைகள் இனிப்புகள் வழங்கி வாழ்த்தி பேசினார்.
நிகழ்ச்சியில் அதிமுக நகரச்செயலாளா் கணேசன், பாஜக நகரத்தலைவா் முத்துமாரியப்பன், தென்காசி பாஜக நகரத்தலைவா் சங்கரசுப்பிரமணியன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் கருப்பசாமி உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் ராஜ்குமார் தென்காசி நகரச் செயலாளர் நாராயணன் தென்காசி நகர பொருளாளர் விஸ்வநாதன் மேலகரம் பேரூராட்சி மன்ற உறுப்பினர் மகேஸ்வரன் செங்கோட்டை ஒன்றியத்தலைவா் பால்ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினா் ஸ்ரீனிவாசன், ஓபிசி அணி மாவட்டத்தலைவா் மாரியப்பன், பாஜக நகர்மன்ற உறுப்பினா்கள் செண்பகராஜன், வேம்புராஜ், ராம்குமார் விகே புதூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பரசுராமன் செங்கோட்டை நகர பாஜக துணைத்தலைவா் கேகே.சுந்தரம்
அறக்கட்டளை உறுப்பினா்கள் முத்துகிருஷ்ணன், வீராயாதவ், கண்ணபிரான், சிவா முன்னாள் நகர இளைஞரணி நிர்வாகி ஸ்ரீராம்கார்த்தி மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் சமூக ஆர்வலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.





