களத்தில் குதித்து ஜோரா கபடி விளையாடிய ரோஜா!

இந்தியா சற்றுமுன்
roja - 2026

நடிகையும், ஆந்திர எம்.எல்.ஏ.வுமான ரோஜா, கபடி விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக ஒரு ரவுண்டு வந்தவர் ரோஜா. பிறகு இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை மணந்த பிறகு நடிப்பதை குறைத்துவிட்டார்.

அதேசமயம், அரசியலில் ஆர்வம் கொண்டிருந்த ரோஜா, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.

இந்நிலையில், நகரி தொகுதியில் நடைபெற்ற கபடி போட்டியை தொடங்கி வைக்க சிறப்பு விருந்தினராக ரோஜா சென்றிருந்தார். அங்கு பொதுமக்கள் அவருக்கு தடபுடலாக வரவேற்பு அளித்தனர். இதனால் உற்சாகம் அடைந்த ரோஜா, யாரும் எதிர்பாராத வகையில் கபடி களத்தில் இறங்க, கூட்டம் ஆர்ப்பரித்தது.

புடவையை சற்று ஏற்றி கட்டி, கோட்டைத் தொட்டுக் கும்பிட்டு, கேஷுவலாக இளைஞர்களுடன் கபடி விளையாடினார்.
இந்த புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ALSO READ:  சதுரகிரி கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக மட்டும் செல்ல வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.