2 ஆம் கல்யாணம் செஞ்சு வையுங்க..! கரண்டு கம்பத்தில் ஏறி மிரட்டிய 60 வயது தாத்தா!

Published:

thatha - 2026

60 வயதில் இரண்டாவது திருமணம் செய்து வைக்கவில்லை என்று தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சோப்ரான் என்ற 60 வயதாகும் நபர் ராஜஸ்தான் மாநிலத்தின் தோல்பூர் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இவருக்கு 5 பிள்ளைகள் உள்ள நிலையில் இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதால் தனக்கு 60 வயது தானே ஆகிறது அதனால் தனக்கு 2வது திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார்,

ஆனால் பேத்தி வயதில் அவர்க்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க மனம் இல்லாமல் மறுத்ததால் விரக்தியடைந்த சோப்ரான் 11000 வோல்டேஜ் மின்சார கம்பத்தின் மீது ஏறி அங்குள்ள அனைவரையும் ” எனக்கு மறுபடியும் திருமணம் செய்து வைக்க வில்லை என்றால் நான் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியுள்ளார்.

old man - 2026

இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த அப்பகுதி வாசிகள் மின்சார வாரியத்துக்கு தகவல் கொடுத்ததை அடுத்து மின்கம்பத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின் அனைவரும் சேர்ந்து சமாதானம் செய்து வைத்ததினால் கீழே இரானி வந்துள்ளார் சோப்ரான்.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

Related articles

Recent articles

spot_img