தனக்கு முன் திருமணமான தம்பி! படுக்கை அறைக்குள் நுழைந்து அண்ணன் செய்த விபரீத செயல்!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
bedroom
bedroom

தனக்கு முன்பே திருமணம் செய்து கொண்டதால், தனது தம்பியையும் அவரது மனைவியையும் அண்ணனே கோடரியால் வெட்டி கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலம் டேட்டியாவில் பெஹ்ருகா கிராமத்தில் சந்தோஷ் குஷ்வாஹா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு முன்பே தனது தம்பி திருமணம் செய்து கொண்டதால் மன அழுத்தத்தில் இருந்தார். இந்த காரணத்திற்காக அவர் தனது தம்பி கிஷன் குஷ்வாஹா மற்றும் அவரது மனைவி பிரியங்கா குஷ்வாஹாவை ஆகியோரை கோடரியால் வெட்டியுள்ளார்.

கணவன், மனைவி இருவரும் படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்தபோது சந்தோஷ் இந்தக் கொலையைச் செய்துள்ளார்.

murder
murder

இந்த கொடூர தாக்குதலில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரழந்தனர். காவல்துறையினர் இதுகுறித்து விசாரித்த போது, தனது தம்பி, தான் முதலில் திருமணம் செய்துகொண்ட பிறகு திருமணம் செய்து கொள்வாரா? இல்லை தனக்கு முன்னாள் திருமணம் செய்து கொள்வாரா? என்று அவர் எப்போதும் பயந்து கொண்டே இருந்ததும் தெரியவந்தது.

தம்பியின் திருமணத்தை பற்றி நினைத்து மன அழுத்தத்தில் இருந்தார் என்றும், ஆனால் அவர் அத்தகைய அதிர்ச்சியூட்டும் காரியத்தைச் செய்வார் என யாருக்கும் தெரியாது என்றும் அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். இதனையடுத்து சந்தோஷ் தலைமறைவாகி விட்டதை அடுத்து, போலீசார் அவரை தேடி வருகின்றனர். இந்த படுகொலையில் பயன்படுத்தப்பட்ட கோடரியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்

ALSO READ:  தமிழின் மாண்பை இழிவுபடுத்திய நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.