ஆட்டோவில் மறந்து வைத்த மொபைல், பணம்.. தேடி வந்து கொடுத்த டிரைவர்! குவியும் பாராட்டு!

இந்தியா சற்றுமுன்
auto driver 1 - 2026

புவனேஸ்வரை சேர்ந்தவர் சுசந்தா சாஹூ. இவர் சில நாட்களுக்கு முன்பு, ஓலா ஆட்டோ ஒன்றில் பயணம் செய்திருக்கிறார். போகும் இடம் வந்தவுடன், அவசரத்தில், தனது மொபைல் போனையும், பர்ஸையும், ஆட்டோவில் மறந்து வைத்துவிட்டு சென்றுவிட்டார்.

சிறிது நேரத்திற்கு பின் மொபைலை தேடிய போது தான், தனது பொருட்களை தொலைத்துவிட்டது அவருக்கு தெரிந்திருக்கிறது.

என்ன செய்யலாம் என முழித்து கொண்டிருந்த அவரை தேடி, அந்த ஆட்டோ டிரைவரே வந்து விட்டார். ஜெகன்நாதா பத்ரா என்ற அந்த ஆட்டோ டிரைவர், சுசந்தா ஆட்டோவில் தவறவிட்ட பர்ஸையும், மொபைல் போனையும் அவரிடம் ஒப்படைத்திருக்கிறார்.

பத்ராவின் நேர்மையை கவுரவிக்க எண்ணிய சுசந்தா, அவருக்கு பணம் தந்து பாராட்டி இருக்கிறார். ஆனால் பாராட்டை மட்டும் ஏற்றுக் கொண்ட பத்ரா, பணத்தை அன்போடு ஏற்க மறுத்திருக்கிறார்.

இந்நிலையில் நடந்த இந்த சம்பவத்தையும், ஆட்டோ டிரைவரின் நேர்மையையும், சுசந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இந்த டுவிட் வைரலாக, நெட்டிசன்கள் பலரும் ஆட்டோ டிரைவரின் நேர்மையை பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.