நடிகர் அமிர்கானுக்கு கொரோனா!

இந்தியா சற்றுமுன் சினிமா
aamir khan
aamir khan

பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் மும்பையில் தன்னுடைய வீட்டில் தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ள தகவல் வெளியாகி அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கொரோனா தொற்று சற்று ஓய்ந்ததை நினைத்து இந்திய மக்கள் மகிழ்ச்சியடைந்த நிலையில், ஆனால் தற்போது மீண்டும் கொரோனா அதிக அளவில் பரவ துவங்கியுள்ளது.

சமீபத்தில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அவரது அம்மா தெரிவித்தார். அதே போல் நடிகர் சூர்யா கொரோனாவால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் தான் அதில் இருந்து குணமடைந்த நிலையில், இவர்களை தொடர்ந்து தற்போது மற்றொரு முன்னணி பாலிவுட் ஸ்டார் நடிகர் அமீர் கான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவரது, செய்தி தொடர்பாளர் அமீர் கானுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை உறுதி செய்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள தகவலில், நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

அந்த விதத்தில், நடிகர் அமீர் கானுக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது அவருக்கு பாசிட்டிவ் என வந்துள்ளது. இதை தொடர்ந்து, அவர் வீட்டிலேயே தன்னை தானே தனிமை படுத்திகொண்டு, மருத்துவர்களின் ஆலோசனைப்படி உரிய மருந்துகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.