vankodumai - 2026

கர்நாடக மாநிலத்தில் உள்ள தவணகெரே மாவட்டம் ஒன்னாளி (Honnali) பகுதியை சார்ந்த 16 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.

சிறுமி தனது பெற்றோருடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்த நிலையில், சிறுமிக்கு கடந்த சில நாட்களாக வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, சிறுமியை பெற்றோர்கள் அங்குள்ள ஒன்னாளி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லவே, அங்கு நடந்த பரிசோதனையில் சிறுமி 3 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மருத்துவர்கள் குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு காவல் துறை அதிகாரிகளுடன் விரைந்த குழந்தைகள் நல அதிகாரிகள் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டதில், சிறுமியின் குடும்பம் கூட்டுக்குடும்பம் என்பதால் அனைவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.

இதன்போது, சிறுமியின் பெரியப்பா மகன் 17 வயது சிறுவன், சிறுமியை கட்டாயப்படுத்தி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

மேலும், இது குறித்து யாரிடமும் கூறினால் கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டவே, சிறுமி இது குறித்து யாரிடமும் கூறாமல் இருந்து வந்துள்ளார். இதனையடுத்து, சிறுமியை கர்ப்பமாக்கிய 17 வயது சிறுவனை காவல் துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ALSO READ:  சதுரகிரி கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக மட்டும் செல்ல வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending