யூட்யூப் வீடியோ பார்த்து தலைமுடிக்கு ஸ்டைல்! உயிரிழந்த சிறுவன்!

இந்தியா சற்றுமுன்
student hair style
student hair style

தலை முடிக்கு மண்ணெண்ணை தடவி அதை தீப்பெட்டியை பயன்படுத்தி நேராக முயன்ற சிறுவன் உயிரிழப்பு.

இன்று சிறியவர்கள் வரை முதியவர்கள் வரை அனைவரின் கரங்களிலும் ஆண்ட்ராய்ட் போன்கள் தவழ்கிறது. இதில் இணையத்தில் தான் பலரும் உலா வருவதுண்டு.

அந்த வகையில் யூடியூப் சேனல்களில் போடப்படும் சில வீடியோக்களை நம்பி பலரும் அதில் உள்ளவாறே தங்களது அழகை மெருகூட்டும் செய்கால்களில் ஈடுபடுகின்றனர்.

அந்த வகையில் திருவனந்தபுரம் அருகே வெங்கனூரை சேர்ந்த சிவன் நாராயணன் என்ற 12 வயது சிறுவன் யூடியூப் சேனலை பார்த்து தலை முடியை நேராக்க முயன்றுள்ளார். இதற்காக அவர் தலை முடிக்கு மண்ணெண்ணை தடவி அதை தீப்பெட்டியை பயன்படுத்தி நேராக முயன்றுள்ளார்.

இதனால் சிறுவனுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டு உள்ளது. இச்சிறுவன் இந்த செயலை தனது பாட்டி மட்டும் வீட்டில் இருந்த நேரத்தில் செய்துள்ளார். அதிகமான தீக்காயங்கள் ஏற்பட்ட சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.