5 வயது மகளுடன் வசித்து வந்த தந்தை! 5 வருடமாக பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
vankodumai
vankodumai

மனைவியை விவாகரத்து செய்துவிட்டு ஐந்து வயதான தனது மகளுடன் தனியாக வாழத்தொடங்கிய தந்தை, ஐந்து வயதில் இருந்து மகளை ஐந்து ஆண்டுகளாக வன்கொடுமை செய்த வந்த கொடுமை தெரியவந்தது.

தந்தை என்பதாலும் அறியாத வயது என்பதாலும் இதைப்பற்றி அந்த சிறுமி ஐந்து வருடமாக எதையும் வெளியே சொல்லவில்லை. இதை சாதகமாக்கிக்கொண்ட தந்தை மகளை தொடர்ந்து வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

இது அக்கம்பக்கத்தினருக்கு தெரிந்துவிட, அவர்கள் அளித்த தகவலின் பேரில், சமூக நலத்துறை அதிகாரிகள் ரகசியமாக அந்த சிறுமியிடம் விசாரனை நடத்தினர்.

விசாரணையில் தனக்கு நேர்ந்த கொடுமையினை சொல்லி அழுதிருக்கிறார் சிறுமி. இதையடுத்து சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், தந்தையின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதை அறிந்த தந்தை தலைமறைவாகிவிட்டார். அவரைபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது.

உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவம் அம்மாவட்டம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.