சென்னை: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் இன்று கலவரம் கட்டுக்கடங்காமல் சென்றது. தூத்துக்குடி பனிமய மாதா சர்ச்சில் இருந்து வெளியேறி வந்த போராட்டக்காரர்கள் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்துக்குள் சென்று வன்முறையில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீஸார் போராட்டக்காரர்களைக் கலைக்க துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக இன்று அரசு வெளியிட்டுள்ள செய்தியில், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம், காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்ககப்படும்.
பலியானவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட ஆவன செய்யப் படும். துப்பாக்கிச்சூடு சமப்வம் குறித்து ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும்… என்று தெரிவிக்கப் பட்டது.




