டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் சேருவதற்கு தேர்வு முகாம்!

இந்தியா உள்ளூர் செய்திகள் கல்வி சற்றுமுன் சென்னை
jeyachitra bhanu - 2026

டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் சேருவதற்கான தேர்வு முகாம் சென்னையில் நடக்கிறது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் ஜனவரி 2022 பருவத்தில் சேருவதற்கான தேர்வு வருகிற ஜூன் மாதம் 5ம் தேதி சென்னையில் நகரில் நடைபெறவுள்ளது.

இந்த தேர்வு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய இரண்டும் கொண்டதாக இருக்கும். எழுத்துத் தேர்வு, ஆங்கிலம், கணக்கு மற்றும் பொது அறிவு ஆகிய தாள்கள் கொண்டது. நேர்முகத் தேர்வு அறிவுக் கூர்மை மற்றும் தனித்தன்மையை ஆராய்வதாக இருக்கும்.

எழுத்துத் தேர்வில் தேர்வானவர்களுக்கு மட்டும் வருகிற அக்டோபர் மாதம் 6ம் தேதி நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.

விண்ணப்ப படிவம், தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தேர்விற்கான வினாத்தாள் தொகுப்பை ‘கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி, டேராடூன், உத்தரகாண்ட், பின்கோடு 248 003’ என்ற முகவரிக்கு விண்ணப்பித்து, டேராடூன் டெல்பவன், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் (வங்கி குறியீடு எண். 01576) செலுத்தத்தக்க வகையில் பொது பிரிவினர் ₹600 மற்றும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினர் ₹555 கேட்புக் காசோலை அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.

www.rimc.gov.in என்ற இணைய வழி மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பேடு ஆகியன சென்னையிலுள்ள இத்தேர்வாணைய அலுவலகத்திலிருந்து விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படமாட்டாது.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து(இரட்டையாக), தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையச் சாலை, பூங்கா நகர், சென்னை & 600003 என்ற முகவரிக்கு வரும் ஏப்ரல் மாதம் 15ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு www.rimc.gov.in என்ற இணையதளத்தை பார்த்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.