புதுதில்லி: இந்திய தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் இன்று தேசிய வாக்காளர் பட்டியல் சரிப்பார்ப்பு மற்றும் நம்பகத்தன்மை நிகழ்ச்சியை துவக்கியது. வாக்காளர் பட்டியலில் எந்தவித பிழையும் இல்லாமல் நம்பகத்தன்மையை கொண்டுவருவதே இதன் நோக்கமாகும். இந்நிகழ்ச்சியில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை ஆதாருடன் இணைக்கப்படும். வாக்காளர்களும் புகைப்பட தரத்தை அதிகரிப்பதும் திருத்தங்கள் போன்றவற்றை சரிசெய்வதும் இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும். தேர்தல் ஆணைய இணையதள சேவையின் மூலம் வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை குறுஞ்செய்தி, மின் அஞ்சல், மொபைல் அப்ளிகேஷன் மற்றும் தேசிய வாக்காளர் சேவை இணையம் ஆகிய வசதிகள் கொண்டு இணைத்துக்கொள்ளலாம். இதைத்தவிர 1950 என்ற எண்ணின் மூலம் மாநில சேவை மையத்தை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தங்கள் ஆதார் எண் விவரங்களையும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண் அதன் நகல்களையும் சமர்பிக்கலாம். வாக்காளர் பதிவு அலுவலர் ஏற்பாடு செய்யும் சிறப்பு முகாம்களிலும் வாக்காளர் வசதி மையங்களிலும் இணைய சேவை மையங்களிலும் மாவட்ட தேர்தல் அலுவலர்களால் அங்கீகரிக்கப்பட்ட குடிமக்கள் சேவை மையங்களிலும் ஆதார் எண்ணை சமர்பிக்கலாம். தேர்தல் அதிகாரிகள் கணக்கெடுப்பின்போதும் இந்த தகவலை தெரிவிக்கலாம். பொது மக்கள் அதிக அளவில் பங்கேற்பதை உறுதிசெய்ய தேசிய அளவிலான சிறப்பு முகாம்களை வாக்காளர் பதிவு அலுவலர் 12.4.2015 அன்று ஏற்பாடு செய்துள்ளார். தேசிய வாக்காளர் பட்டியல் சரிப்பார்ப்பு மற்றும் நம்பகத்தன்மை நிகழ்ச்சியின் கீழ் பல்வேறு இடங்களில் பதிவு செய்துள்ள வாக்காளர்கள் தானாக முன்வந்து தகவலை அளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வாக்காளர்கள் படிவம் 7யை சமர்பிக்க வேண்டும். இதன்மூலம் பல்வேறு இடங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள அவர்களின் பெயர் நீக்கப்பட்டு அவர்கள் தங்கி உள்ள முகவரிக்கு ஏற்றபடி வழங்கப்படும். படிவம் 7யை தேசிய வாக்காளர் சேவை இணையம் அல்லது சிறப்பு முகாம்கள் / இணைய சேவை போன்ற மற்ற மையங்களிலும் சமர்ப்பிக்கலாம்.
புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை ஆதாருடன் இணைப்பு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari