திருப்பதி மலையடிவாரகோவிலில் நடமாடிய சிறுத்தைகள்!

இந்தியா சற்றுமுன்
IMG 20210519 133311
IMG 20210519 133311

திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள கோவில் வளாகத்தில் சிறுத்தைகள் நடமாடிய காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.

திருப்பதி மலை அடிவாரத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தில் இருக்கும் கபிலேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. அடர்ந்த வனப்பகுதியான திருப்பதி மலை அடிவாரத்தில் இருக்கும் இந்த கோயில் வளாகத்திற்கு சிறுத்தைகள் நுழைந்துள்ளது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக திருப்பதிக்கு பக்தர்கள் வருகை மிகவும் குறைந்துவிட்ட நிலையில், கபிலேஷ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் வருகையே இல்லை என்று கூறுவதற்கான நிலைமை ஏற்பட்டுள்ளது.

எனவே அந்த பகுதியில் மனித நடமாட்டம் குறைந்துவிட்ட காரணத்தால் அருகில் உள்ள வனப்பகுதியில் வசிக்கும் சிறுத்தை புலிகள் அங்கு வந்து நடமாட துவங்கியுள்ளன. இது தொடர்பான காட்சிகள் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.