இது பெரிய… யார் கம்பெனி.. ஆர்டர் செய்தது செல்போன் வந்தததோ..!

இந்தியா சற்றுமுன்
parcel
parcel

இமாசலபிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் சசி தாக்கூர். இவர் இணைதளம் மூலம் பிரபல நிறுவனத்தில் செல்போனுக்கு ஆர்டர் செய்துள்ளார். அந்த செல்போனுக்கான விலை 15 ஆயிரம் கட்டணத்தை கிரெடிட் கார்டு மூலம் செய்துள்ளார்.

சில நாட்களில் சசி தாக்கூரின் வீடு தேடி செல்போன் பெட்டி வந்தது. ஆவலாய் அதைப்பிரித்த சசி தாக்கூருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

cell
cell

உள்ளே இருந்தது செல்போன் அல்ல வெங்காயங்கள். வெறுத்துப் போன சசி தாக்கூர் குருகிராமில் உள்ள அந்த செல்போன் நிறுவனத்திற்கு போன் செய்து விஷயத்தை கூறியுள்ளார். இது தொடர்பாக எழுத்துப் பூர்வமான புகார் ஒன்றை அனுப்பியுள்ளார்.

onion
onion

10 நாட்களில் உங்களுக்கு புதிய செல்போன் வழங்கப்படும் என அந்த நிறுவனம் கூறியுள்ளது. புகாரை அனுப்பிவிட்டு புதிய போனை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்வதில் ஆர்வம் காட்டுபவர்கள் எவ்வளவு தூரம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்த சம்பவம் உதாரணமாக அமைந்துள்ளது.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.