இந்த தடவை உடைமை தவற விட்டது கமலி இல்லை சூர்யா! மீட்டுக் கொடுத்த காவலர்கள்!

இந்தியா சற்றுமுன்
train 1 1 - 2026

சகோதரர்கள் ரயிலில் தவறவிட்ட பையை ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சூர்யா ஜெயவர்தன் என்பவரும், அவரது சகோதரரும் உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக தாம்பரம் ரயில் நிலையத்தில் வந்து இறங்கியுள்ளனர். இந்நிலையில் சூர்யாவின் சகோதரர் மாற்றுத்திறனாளி என்பதால் ரயிலில் இருந்து கீழே இறங்கும் போது முதலில் அவரை இறக்கி விட்ட பிறகு சூர்யா தனது உடைமைகளை எடுக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அதற்குள் ரயில் எழும்பூருக்கு புறப்பட்டுள்ளது.

இதனால் ரயிலிலேயே சூர்யா தனது உடைமைகளை தவற விட்டதால் உடனடியாக ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்தில் நடந்தவற்றை கூறியுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த எழும்பூர் ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் ரயில் நடைமேடைக்கு வந்தவுடன் சூர்யாவின் உடைமைகளை பத்திரமாக மீட்டுள்ளனர். அந்த பையில் 1 1/2 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த இரண்டு லேப்டாப்கள் இருந்துள்ளது. இதனை அடுத்து பத்திரமாக மீட்கப்பட்ட பையை காவல்துறையினர் சூர்யாவிடம் ஒப்படைத்து விட்டனர்

ALSO READ:  செல்போனுக்குத் தடை; கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தண்டனையா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.