karnam malleswari - 2026

டெல்லி ஸ்போர்ட்ஸ் யுனிவர்சிட்டி வைஸ் சான்சிலராக ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த பளு தூக்கும் விளையாட்டு வீராங்கனை கர்ணம் மல்லீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து டெல்லி உயர் கல்வித்துறை இயக்குனர் அஜ்மில்கான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்த கர்ணம் மல்லீஸ்வரி 2000மாவது ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுகளில் பங்கு கொண்டு இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் வென்றளித்தார். 1999ல் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அளித்து மல்லீஸ்வரியை கௌரவித்தது.

பிரமுக வெயிட் லிஃப்டர் பத்மஸ்ரீ கர்ணம் மல்லேஸ்வரி (46) யின் நியமனம் குறித்து செவ்வாயன்று டெல்லி அரசாங்கம் உத்தரவு வெளியிட்டுள்ளது. இந்த ஸ்போர்ட்ஸ் பல்கலைக்கழகத்திற்கு கர்ணம் மல்லீஸ்வரி முதல் விசி என்று அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். விரைவிலேயே இந்த நியமனம் தொடர்பாக நடைமுறைகள் வெளியிடப்படும் என்று தெரிவித்தனர்.

ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்த கர்ணம் மல்லீஸ்வரி 2000 வது ஆண்டில் நடந்த சிட்னி ஒலிம்பிக்கில் பங்கு கொண்டு இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் வென்றளித்தார். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் பாரதியப் பெண்ணாக பெருமை பெற்றார்.

ஒலிம்பிக் வெற்றிக்கு முன்பாகவே… 29 சர்வதேச பதக்கங்களோடு இரண்டு முறை வெயிட் லிஃப்டிங்கில் உலக சாம்பியனாக கர்ணம் மல்லீஸ்வரி நின்றுள்ளார். இதில் 11 தங்கப்பதக்கங்கள் உள்ளன. 1999ல் மத்திய அரசாங்கம் மிக உயர்ந்த விருதான பத்மஸ்ரீ அளித்து கர்ணம் மல்லீஸ்வரியை கௌரவித்தது. 1994ல் அர்ஜுனா அவார்டு பெற்ற மல்லீஸ்வரி 1995ல் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றார்.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

ஸ்போர்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு வீரர்கள் தான் தேர்ந்தெடுக்கும் விளையாட்டில் பிஹெச்டி வரை படித்து பட்டம் பெறலாம் என்று டெல்லி டிப்யூடி சிஎம் மனீஷ் சிசோடியா தெரிவித்தார். அவர்கள் வேறு எந்த டிகிரியும் படிக்க வேண்டிய தேவை இருக்காது என்று கூறினார். ஒலிம்பிக் விளையாட்டுகளில் நாட்டுக்கு குறைந்தபட்சம் 50 வரை தங்கப் பதக்கங்கள் பெறும்படியாக விளையாட்டு வீரர்களை தயார் செய்வதே இந்த யூனிவர்சிடி ஏற்பாட்டின் பின்னால் உள்ள முக்கிய உத்தேசம் என்று அவர் விவரித்தார். டெல்லி ஸ்போர்ட்ஸ் யுனிவர்சிட்டி விளையாட்டுத்துறையில் தேசம் கர்வப்படும் விதமாக செயல்படும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளது என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending