
இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இன்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி இலங்கையை வென்று, தொடரைக் கைப்பற்றியது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் எடுத்தது. சரித் அசலங்க 65 ரன்னும், அவிஷ்கா பெர்னாண்டோ 50 ரன்னும், சாமிகா கருணரத்ன 44 ரன்னும் எடுத்தனர். இந்திய தரப்பில் புவனேஷ்வர் குமார், ஷாகல் இருவரும் தலா 3 விக்கெட்டும், தீபக் சாஹர் 2 விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் ஆடிய இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்த போதும், கடைசி வரிசை ஆட்டக் காரர்கள் கவனம் எடுத்து ஆடியதால் 49.1 ஓவரில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 277 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் தீபக் சாஹர் 69 ரன்னும் சூர்யகுமார் யாதவ் 53 ரன்னும், மனீஷ் பாண்டே 37 ரன்னும் எடுத்து வெற்றிக்குக் கை கொடுத்தனர்.
இதனால் இந்திய அணி இரண்டாவது ஒரு நாள் போட்டியையும் வென்று, தொடரைக் கைப்பற்றியது.