யானைகள் உற்சாக பிளிறல்! வீடியோ வைரல்!

இந்தியா சற்றுமுன்
elephant 1 3 - 2026

சமூக ஊடகங்களில் மில்லியன் கணக்கான படங்கள் மற்றும் விலங்குகளின் வீடியோக்கள் உள்ளன. வனவிலங்கு மீது ஆர்வமுள்ளவர்கள் விலங்குகளை குறித்து அழகான புகைப்படம் மற்றும் அற்புதமான வீடியோவை எடுக்க பல மணிநேரம் செலவிடுகிறார்கள்.

சிங்கத்தின் கர்ஜனை கேட்டால் காட்டில் உள்ள எல்லா விலங்குகளும் நடுங்கும் என்று கூறப்படுவதை கேட்டிருப்பீர்கள். ஆனால் யானையின் நடுக்க வைக்கும் சத்தத்தை நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோ மிகவும் பிரமாண்டமானது, அதைப் பார்த்தால் ஒருகணம் நீங்களே அச்சப்படுவீர்கள்.
யானை பிளிறும் சத்தம் ஆத்மாவை நடுங்க வைக்கக்கூடும்.

வீடியோவில் 5 முதல் 6 யானைகள் காணப்படுகின்றன. அவைகள் ஏதோ ஒரு உற்சாகத்தில் ஒன்றாகக் கூச்சலிடுவது போல் தெரிகிறது.

யானைகளின் மிகவும் சுவாரஸ்யமான வீடியோவை ஐ.எஃப்.எஸ் சுசாந்த் நந்தா தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ளார். அதில் “யானைகளை நேசிப்பவர்களுக்கான இந்த சிறப்பு வீடியோ” எனப்பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோவை பலர் பார்த்துள்ளனர். அதை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்வது மட்டுமல்லாமல், பல்வேறு வகையான கருத்துகளையும் எதிர்வினைகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply