
ஒலிம்பிக் இன்றைய களநிலவரம் 03.08.2021
- ஆண்கள் ஹாக்கி அரையிறுதிப் போட்டியில்யில் இந்தியா 2-5 என்ற கணக்கில் பெல்ஜியத்திடம் தோல்வியடைந்தது, இப்போது வெண்கலப் பதக்கத்திற்காக ஜெர்மனியுடன் விளையாடும்.
- தஜிந்தர்பால் சிங் தோர் குரூப் ஏ குண்டு எறிதல் தகுதிப் போட்டியில் 13ஆவது இடத்தைப் பிடித்தார். ஆனால் ஆண்களுக்கான இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறவில்லை.
- நாட்டின் மல்யுத்தப் போட்டிகளில் ஒரு பதக்கத்திற்கான தேடல் சோனம் மாலிக் இன்று விளையாடிய தனது 62 கிலோ ஃப்ரீஸ்டைல் காலிறுதிக்கு முந்தைய போட்டியோடு தொடங்கியது. அதில் அவர் தோல்வியடைந்ததார்.
- அன்னு ராணி ஒலிம்பிக் போட்டிகளில் பெண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறத் தவறி, தனது மூன்றாவது மற்றும் இறுதி முயற்சியில் 54.04 மீட்டருக்கு கீழே எறிந்து 14ஆவது இடத்தைப் பிடித்தார்.
நாளைய (04.08.2021) நிகழ்வுகள்:
- ஈட்டி எறிதல் – (1) நீரஜ் சோப்ரா 0535 AM, (2) சிவபால் சிங் 0705 AM
- கோல்ஃப் பெண்களின் தனிநபர் – (1) அதிதி அசோக் 0555 AM (2) தீக்ஷா தகா 0739 AM
- மல்யுத்தம் – (1) ஆண்கள்: (a) ரவிக்குமார் 0800 (b) தீபக் புனியா 0800 AM க்குப் பிறகு; பெண்கள்: அனுஷா மாலிக் -57 கிலோ- 0800 AM
- குத்துச்சண்டை – லோவ்லினா போர்கோஹெய்ன் (வெள்ளி/தங்கப் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, வெண்கலம் 1100 AM க்கு வெல்லும் யூரே)
- ஹாக்ஜி – பெண்கள் – 0330 PM இந்தியா vs அர்ஜென்டினா – அரையிறுதி
- முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்