shikar dhawan
shikar dhawan

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களுள் ஒருவரான ஷிகர் தவான் (35) அவரின் மனைவி ஆயிஷா முகர்ஜியை விவாகரத்து செய்துள்ளார் . இதனை ஆயிஷா முகர்ஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆயிஷா ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரைச் சேர்ந்த ஒரு குத்துச்சண்டை வீராங்கனை. ஆயிஷாவுக்கு ஏற்கனவே திருமணமாகி இரு பெண் குழந்தைகள் இருந்த நிலையில் அவரின் முதல் கணவரை பிரிந்து 2012இல் ஷிகர் தவானை திருமணம் செய்து கொண்டார்.

இருவருக்கும் சோராவர் எனும் மகன் உள்ளார். மேலும் ‘ஆயிஷா தவான்’ என்ற அவருடைய தனிப்பட்ட சமூக ஊடக கணக்கையும் அவர் அழித்துள்ளார். விவாகரத்து குறித்து ஷிகர் தவன் எதையும் உறுதிப்படுத்தவில்லை.

ஹர்பஜன் சிங்கின் நண்பர் வட்டத்தில் இருந்த ஆயிஷாவை, ஷிகர் தவான் பேஸ்புக்கில் முதல் முறையாக பார்த்தார். பின்னர் இருவரும் அறிமுகமாகி திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு முதலில் தவானின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். தவான் அவர்களை சமாதானம் செய்து திருமணம் செய்து கொண்டார். ஆயிஷாவின் குடும்பத்தினர் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர்கள், பின்னர் ஆஸ்திரேலியாவில் குடியேறினர்.

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!

இந்நிலையில் ஆயிஷா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான நீண்ட பதிவை இட்டுள்ளார். அதில் விவாகரத்து என்பது திருமணம் என்ற பெயரில் என்னுடைய வாழ்க்கையை பிறருக்கு அர்ப்பணிக்காமல் என்னை தேர்ந்தெடுப்பதுவாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனது உறவுகள், எதிர்கால உறவுகளுடன் எப்படி இருக்க வேண்டும் என்ற பாடங்களை கற்றுத்தருவதும், நான் எப்போதும் இருப்பதைக் காட்டிலும் வலிமையானவளாக இருப்பதும் தான் விவாகரத்து என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending